உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை

உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: உக்ரைனை தற்காலிகமாக ஐ.நா.,வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: உக்ரைனை தற்காலிகமாக ஐ.நா.,வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மிகவும் திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இது பற்றி விவாதிக்க முடியும். இது ஜனநாயக தேர்தல்களை நடத்துவதற்கும், மக்களால் நம்பப்படும் ஒரு திறமையான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கும், பின்னர் ஒரு சமாதான ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் உதவும்.தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போதைய உக்ரைன் அதிகாரிகள் அனைவரும் சட்டவிரோதமானவர்கள் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். புடினின் கருத்துகளுக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கியின் தலைமை தளபதி ஆண்ட்ரி யெர்மக் கூறியதாவது: ரஷ்யா அமைதியை நோக்கிய நகர்வுகளைத் தடுக்க முயற்சி நடக்கிறது. போரை தொடர முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறியதாவது: உக்ரைனில் ஆட்சி அரசியலமைப்பு மற்றும் மக்களால் தீர்மானிக்கப்படுகிறது என பதில் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சிட்டுக்குருவி
மார் 29, 2025 20:38

கோமாளி இரண்டே நாளில் உக்ரானை பிடுத்துவிடுவேன் என்று போரை ஆரம்பித்துவிட்டு இப்போது கோழியும் போச்சு குரலும் போச்சு என்ற கதையாகிவிட்டது .டிரம்ப் அவரை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்தார் .ஆனால் ஆப்பம் பங்கிட்ட குரங்கு கதையாகிவிட்டது . மோடிஜி தான் அவரை இந்த நிலைமையில் இருந்து சுயமரியாதையோடு காப்பாற்றவேண்டும் .


rama adhavan
மார் 29, 2025 11:38

அப்படியே ரூஷ்யாவையும் கூடக் கொண்டு வந்து விடவும். சண்டை இருக்காது.


Anand
மார் 29, 2025 11:17

உக்ரைன் அதிபரால் தான் இவ்வளவு களேபரத்திற்கு காரணம். அவரை தூக்கினாலே பிரச்சனை முடிந்துவிடும்..


சமீபத்திய செய்தி