உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புர்கா அணிய சுவிட்சர்லாந்தில் தடை

புர்கா அணிய சுவிட்சர்லாந்தில் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்ன்:முகத்தை மூடும்படியான, 'புர்கா' அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை, சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வந்துள்ளது.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், அரசு எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், மக்களின் கருத்தைக் கேட்கும்; ஓட்டெடுப்பை நடத்தும். பொது இடத்தில் முகத்தை மூடும்படி எதையும் அணிவதற்கு தடை விதிக்கும் தீர்மானம் கடந்த 2021ல் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், 52 சதவீத மக்கள் ஆதரவு அளித்தனர்.இந்த தீர்மானத்தில் முஸ்லிம்கள் குறித்து கூறப்படவில்லை; பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டம் கடந்தாண்டு நிறைவேறியது. இந்த சட்டம், 2025 ஜன., 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த தடைக்கு, புர்கா தடை என்றே கூறப்படுகிறது. இந்த சட்டம் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி, பொது இடத்தில், தங்களுடைய முகத்தை மறைக்கும்படி, உடைகள், துணிகள் உள்ளிட்டவற்றை அணிவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் சீதோஷ்ணம் ஆகிய சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில், 86 லட்சம் பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகையில், 5 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஆனால், அங்கு பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் துணியை அணிவதில்லை என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Seekayyes
ஜன 03, 2025 22:53

உளமார்ந்த வாழ்த்துக்கள் சுவிஸ் மக்களே. இந்திய அரசாங்கம் இவ்வழி பின்பற்றும்?


M Ramachandran
ஜன 03, 2025 10:51

இங்குள்ள தீவீர வாத எண்ணமுடைய வந்தேரி மதத்தின் கட்டாய மத மாற்றத்தால் அந்த மதத்தில் சேர்த மக்கள் நாம் இந்தியர் கள் என்ற எண்ணமுடன் வாழ வேண்டும். இங்கு நமக்கு எல்ல வித உரிமைகளும் கிடைக்கிறது. அயல் நாட்டின் நிலமையை பாருங்கள். முதலில் ஐரோப்ப கண்டத்தில் வருபவருய்ய அகதிகள் என்று வர்களுக்கு வாழ வகை செய்து கொடுத்திருந்தார்கள். வந்தேரிகள் நிம்மதியான வாழ்க்கையை கேளி கூத்தாக்கி விட்டார்கள். வந்த இடத்தில் மத பிரச்சாரம் அஙகுள்ள மக்களை மதமாற்றுதல். அங்கிருந்த பூர்விக மக்களுக்கு எதிராக அவர்கள் பெண் பிள்ளைகளை ஏமாற்றி மணம் செய்து விட்டு சூடான் போன்றா நாட்டிற்கு அழைத்து சென்று அஙகுள்ள தீவீரா அதிகளுக்கு அடிமையாக்கி விட்டு வருகிறார்கள். பெற்றோர்கள் கவலையில் அரசை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள் அதன் விலைவு ஒவ்வொன்றாக வெளி படுது. ஐரோப்ப கூட்டமைப்பில் தற்போனது ஒரு சட்ட முன் வரைவு தாக்கல் செய்துள்ளார்கள். அந்த அந்த நாட்டின் படி சட்டங்களுக்குட் பட்டுதான் வந்தேரிகள் வாழ வேண்டும் மீறி சட்டத்திற்கு எதிராக கோஷம் கூத்தம்பா நடத்தினால் அவர் அவர் நாட்டிற்கு திருப்பி அனுப்ப படுவார்கள் என்று. அநேகமாக பெருவாரியாக இந்த சட்ட திற்கு ஆதரவு கிடைத்து விடும்


shyamnats
ஜன 03, 2025 10:27

அவசர தேவை அனைவருக்குமான Common Civil Code சட்டம். மத அடிப்படையில் இலவசங்கள், தனி ஒழுக்க சட்டங்கள் ஷரியத் சட்டம் போன்றவை நீக்க வேண்டும் அணைத்து இந்தியரும் சமமாக நடத்த பட வேண்டும்.


vijay
ஜன 03, 2025 09:30

நல்லதுங்க.


Barakat Ali
ஜன 03, 2025 08:32

புர்கா மட்டுமல்ல.. அணியும் விதத்தைக் கொண்டு பல பெயர்கள் உண்டு ....


பேசும் தமிழன்
ஜன 03, 2025 08:17

நாட்டின் பாதுகாப்பு கருதி.. இந்தியாவிலும் பொது வெளியில் புர்கா அணிய தடை செய்யப்பட வேண்டும்... வீட்டில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிந்து கொள்ளலாம்..... குண்டு வைத்து விட்டு... அடையாளத்தை மறைத்து... புர்கா அணிந்து கொண்டு தப்பிக்க வாய்புள்ளது.


Palanisamy Sekar
ஜன 03, 2025 07:35

பெண்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை சுவிஸ் மக்களும் அரசாங்கமும் உணர்ந்துள்ளது. நிச்சயம் அங்கே உள்ள புர்கா அணிந்திருந்த பெண்களுக்கு இது மாபெரும் சுதந்திரத்துக்கு இணையானது. பிற பெண்களை போலவே அவர்களும் முகம் மூடவேண்டிய அவசியமே இருக்காது. பிற நாடுகளில் உள்ள பெண்களும் கூட சுவிஸ் சென்று குடியேறவே ஆசைப்படுவார்கள். பெண் சுதந்திரம் போற்றப்பட வேண்டும். அதனை சுவிஸ் செய்து காட்டியுள்ளது. மூடத்தனம் அகற்றப்பட்டுவிட்டது. ஆணாதிக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது.


Kasimani Baskaran
ஜன 03, 2025 07:32

சுவிட்சர்லாந்தில் இன்று நிறைய புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இவர்களால் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். ஆகவே இந்த தடை விரைவில் நீக்கப்படும் என்று அறிக. கூடுதலாக சுவிட்ஸர்லாந்து கோடியில் இருக்கும் சிலுவையை அகற்ற பல முறை போராடி இருக்கிறார்கள்.


Ram
ஜன 03, 2025 07:04

இந்தியாவிலும் இதை செய்யவேண்டும் , எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர் குடியரசு மதச்சார்பின்மை என்று பேசிக்கொண்டிருக்காமல் நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும்


Ram Moorthy
ஜன 03, 2025 06:52

இந்த திட்டத்தை இந்தியாவிலும் விரைவில் கொண்டு வர வேண்டும் முக கவசம் அணிந்து முஸ்லிம் பெண்கள் பொது வெளியில் செல்ல அனுமதி தரக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் விரைவில்


முக்கிய வீடியோ