பஸ் வெடிகுண்டு பாகிஸ்தானில் ஐந்து பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பள்ளி பஸ் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு என்ற கிளர்ச்சி குழுவுக்கும், பாக்., ராணுவத்துக்கும் அடிக்கடி மோதல் நடக்கிறது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இந்நிலையில் இங்குள்ள குஷ்தார் மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி பஸ் ஜீரோ பாயின்ட் பகுதியில் சென்றபோது, வெடிபொருள் நிரப்பிய காரை அந்த பஸ் மீது மோதவிட்டு நேற்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியாகினர்; 38 பேர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.