வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நம்ம ஊர் மாதிரியே அங்கும் பாலங்கள்.
அல்ஜியர்ஸ்: அல்ஜிரியாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.வட ஆப்பிரிக்க நாடான அல்ஜிரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸ். இங்குள்ள ஆற்றில் பயணிகள் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த, 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.அதிவேகமாக சென்ற பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.
நம்ம ஊர் மாதிரியே அங்கும் பாலங்கள்.