உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவை கைவிட முடியுமா ஆப்பிள் நிறுவனம்?

இந்தியாவை கைவிட முடியுமா ஆப்பிள் நிறுவனம்?

வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது, இந்தியா அதிக வரி விதிக்கும் நாடு, அதை விடுத்து, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஆலையை அமெரிக்காவில் அமைக்க ஆப்பிள் நிறுவனம் முன்வர வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அடுத்த முறை சற்று கடுமை காட்டியுள்ள அதிபர் டிரம்ப், தனது சமூகவலைதள பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டார். அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார். ஆனால் இன்னும் குக் இதற்கு பதிலளிக்கவில்லை. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை, டிரம்ப் பலமுறை எச்சரித்தும், இந்தியாவில் தயாரிக்கும் முடிவில் குக் இன்னும் உறுதியாக இருக்க காரணங்கள் உண்டு.சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதித்ததால், அங்கு தயாரிக்கப்பட்டு வரும் ஆப்பிள் ஐபோன் மாடல்களை, இந்தியாவுக்கு இடம் மாற்ற ஏற்கனவே டிம் குக் திட்டமிட்டிருந்தார்.ஏற்கனவே, பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய ஆலைகளில் ஐபோன் அசெம்பிளிங் நடைபெற்று வருகிறது. தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், பல்வேறு ஐபோன் மாடல்களை இந்தியாவில் தயாரிக்க அவர் முடிவெடுத்திருந்தார். அமெரிக்காவில் விற்கப்போகும் அனைத்து ஐபோன்களும் இந்தியாவில் தயாரித்தவையாக இருக்கும் என்று டிம் குக் கூறியது, டிரம்பை பெரிதும் அசைத்து விட்டது.லாபத்தை இழப்பதா?ஒரு ஐபோனுக்கு சராசரியாக ஆப்பிள் நிறுவனம் தற்போது 450 டாலர் லாபம் ஈட்டுகிறது. அமெரிக்காவுக்கு உற்பத்தியை மாற்றினால், அதன் லாபம் 60 டாலராகக் குறையும். எனவே, லாபத்தில் பெருமளவை இழக்க தயாராக இல்லாத ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்க தயங்குகிறது.இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பல்வேறு அழுத்தங்களை தாக்குப் பிடித்து, இந்தியாவில் தன் முதலீட்டை ஆப்பிள் உறுதிப்படுத்தி, உற்பத்தியை துவங்கினால், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பாக அமையும்.இந்தியாவில் செலவு குறைவுடிரம்ப் வரி விதித்தாலும் கூட, இந்தியாவில் தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்வது, அமெரிக்காவில் தயாரிப்பதைவிடசெலவு குறைவே என, ஆப்பிள் நிறுவனம் கணக்கிடுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா வழங்கும் ஊக்கத் தொகை, சிறப்பான வினியோகத் தொடர், ஏற்கனவே செய்துள்ள அதிக முதலீட்டில் செயல்படும் ஆலைகள், குறைந்த ஊதியச் செலவு ஆகியவை ஆப்பிளுக்கு சாதகமான விஷயங்கள் மாறாக, அமெரிக்காவில் இடத்தின் விலை, அதிக ஊதியம், ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் இல்லாத நிலை ஆகியவை ஐபோன் தயாரிப்பு செலவை அதிகரிக்கும். இதை கணக்கிட்டால், இந்தியாவில் தயாரித்து 25 சதவீத இறக்குமதி செலுத்திய பிறகும், அமெரிக்காவில் ஐபோன் விலை குறைவாகவே இருக்கும் என, ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது.எங்கு, எது தயாராகிறது?

அமெரிக்காவுக்கு மாறினால்...

* இந்தியாவில் தொழிலாளர் மாத சராசரி ஊதியம் 230 டாலர்.* கலிபோர்னியாவில் இது 2,900 டாலர், 13 மடங்கு அதிகம்* இந்தியாவில் ஐபோன் அசெம்பிளிங் செலவு 30 டாலர், அமெரிக்காவில் 390 டாலர்* போக்குவரத்து, உதிரிபாகம், இடவாடகை, வரிகள் என அனைத்தும் அமெரிக்காவில் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 26, 2025 13:19

உலான் மஸ்க்குக்கு ஆப்பிள் நிறுவனத்தை கை மாற்றவே திராவிட மாடல் விஞ்ஞான ரீதியாக டிரம்ப் மிரட்டுகிறார்.


மொட்டை தாசன்...
மே 26, 2025 11:31

அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாடுகளில் தங்கள் பொருட்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டுவது, தயாரிப்பு செலவை குறைப்பதற்காகத்தான். டிரம்பிற்கு இது தெரிந்தும் அந்நாட்டு நிறுவனங்களுக்கு அழுத்தும் தருவது அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தத்தான். அது நடக்குமா என்றால் காலம் தான் பதில்சொல்லவேண்டும் .


Yes your honor
மே 26, 2025 09:48

டிரம்ப் தமிழ்நாட்டு ஸ்டைலில் அதிகமாக உதார் விட்டால், ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் டிரம்பின் உதார் தங்க முடியவில்லை, அமெரிக்காவில் நாங்கள் எங்கள் ஐ-போன் விற்பனையை குறைத்துக் கொள்கிறோம் என்று கூறினாலோ அல்லது பிகாஸ் ஆஃப் டிரம்ப் எங்கள் ஐ-போன் விலை சிறிது கூடுகிறது என்று கூறினாலோ போதும், மொத்த அமெரிக்கர்களும் ரோட்டில் நின்றுகொண்டு டிரம்ப் ஒழிக என்று கோஷம் போட ஆரம்பித்து விடுவார்கள். டிரம்பை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அமெரிக்கர்கள் ஒன்றும் தமிழ்நாட்டு டாஸ்மாக் அடிமைகள் அல்ல, தன்மானமும் சுயசிந்தனையும் உள்ளவர்கள்.


அப்பாவி
மே 26, 2025 08:30

இப்பிடியே போனால் அமெரிக்காவில் வேலை.இல்லா திண்டாட்டம் அதிகமாகி குறைஞ்ச விலை குடுத்து ஆப்பிள் போன் வாங்க அமெரிக்கர்களிடம் காசிருக்காது. ஏற்கனவே 35 டிரில்லியன் டாலர் கடனில் இருக்கு. கடைசியில் டிம் குக்கிடமிருந்து பணத்தைப் பிடிங்கிதான் கடனை அடைக்கிற நிலமை வரும். கட்டாயம் வரும்.


R SRINIVASAN
மே 26, 2025 07:34

ராமா ஆதவன் நீங்கள் ஒரு விஷயத்தை பேசும் முன் அதைப்பத்ரி தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். இங்கு எல்லோரும் அமெரிக்காவில் தயாராகும் கம்ப்யூட்டர்களை அதிகவிலை கொடுத்து வாங்க முன் வருகிறார்கள். ஆனால் அந்த கம்ப்யூட்டர்கள் தயாராகும் இடம் தைவான் .காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது அந்த காண்ட்ராக்டை எடுத்திருந்தால் இந்தியாவில் நிறைய பேருக்கு வேலை கிடைத்திருக்கும் .இட ஒதுக்கீட்டுக்காக சண்டை போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது .ஆனால் இந்தியாவை ஆண்ட இந்திரா காங்கிரஸ் மக்கள் நலனில் அக்கறையில்லாமல் ஆட்சி செய்ததால் இந்தியா பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடாக இருந்தது. இதற்கு முன் அமெரிக்காவை ஆண்ட ரிச்சர்ட் நிக்சன், பில் கிளின்டன்,ரொனால்ட் ரீகன் யாருமே இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. காரணம் ஆசியாவில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக வந்து விடக்கூடாது என்பதுதான்.


உண்மை கசக்கும்
மே 26, 2025 06:58

அமெரிக்கா முழுவதும் பறக்கும் அமெரிக்க கொடிகள் அமெரிக்காவில் தயாரிக்க படுவதில்லை. சீனா, தாய்லாந்து போன்ற நாடுகள் தான் அமெரிக்க கொடிகளை தயாரிக்கின்றன. தன் நாட்டு கொடிகளையே தயாரிக்க துப்பில்லை. கூரை ஏறி கோழி பிடிக்காதாவன்..


rama adhavan
மே 26, 2025 06:33

அவர்கள் நாட்டில் தயாரித்த பொருள்களுக்கு அந்த நாட்டு மக்கள் முன்னுரிமை தந்தால் ஆப்பிள் போன் விற்பனை அடி படுமே? நிறுவனம் இதையும் சிந்திக்குமே? மேலும் டிரம்ப் இதை தெரியாதவரா?


புதிய வீடியோ