உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் ஓடுபாதையில் கவிழ்ந்த விமானம்: 19 பேர் காயம்

கனடாவில் ஓடுபாதையில் கவிழ்ந்த விமானம்: 19 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டொரன்டோ: அமெரிக்காவில் இருந்து வந்த பயணிகள் விமானம், ஓடுபாதையில் இறங்கும்போது விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 19 பேர் காயமடைந்தனர்.அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு 76 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் டெல்டா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் வந்தது. டொரன்டோ நகரில் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=45x72elf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பயணிகள், அலறியடித்துக் கொண்டு, உள்ளே இருந்து குதித்து வெளியேறினர். விபத்திற்கான காரணம் தெரியவில்லை. உடனடியாக போலீசார், மீட்புப் பணியில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக, அந்த விமான நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

எவர்கிங்
பிப் 18, 2025 09:58

பதவியில் இருக்கும் வரை கனடாவுக்கு கேடு காலம் தான்


ஹரேஷ்
பிப் 18, 2025 09:14

விமான விபத்தில் பிழைப்பதே அரிது. கடவுள்காப்பாத்துனாரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை