உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா உடன் பழைய உறவு முடிந்துவிட்டது: வரி விதிப்புக்கு கனடா பதிலடி!

அமெரிக்கா உடன் பழைய உறவு முடிந்துவிட்டது: வரி விதிப்புக்கு கனடா பதிலடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது என அமெரிக்கா அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகிறார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாகன இறக்குமதிக்கு 25 சதவீத வரியை அறிவித்தது. இது அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது. கனடா பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், சீனா பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் டிரம்ப் அறிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zn1d3ecz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது: அமெரிக்காவின் வரிகள் நியாயமற்றவை. ஏற்கனவே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை மீறுவதாகும். அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது. அமெரிக்கா இனி நம்பகமான கூட்டாளி இல்லை. பேச்சுவார்த்தைகள் மூலம் சில நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளின் சகாப்தம் முடிந்து விட்டது. அமெரிக்க பொருட்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி மேலும் வரி விதிக்கப்படும். கனடாவை பலவீனப்படுத்த, நம்மை சோர்வடையச் செய்ய, அமெரிக்கா நம்மை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் பல முயற்சிகள் செய்கிறது. இதை நான் நிராகரிக்கிறேன். அது ஒரு போதும் நடக்காது. சமீபத்திய வரிகளுக்கு எதிராக எங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம். வரி விதிப்பை எதிர்த்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Keshavan.J
மார் 28, 2025 11:14

இவர் இன்னொரு கனடா பப்பு. இருக்க போவதே அக்டோபர் வரைக்கும் . பெரிய பெரிய வசனம் பேசறாரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை