உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாதுகாப்பு தர கனடா மறுப்பு: தூதரக நிகழ்ச்சிகளை ரத்து செய்தது இந்தியா

பாதுகாப்பு தர கனடா மறுப்பு: தூதரக நிகழ்ச்சிகளை ரத்து செய்தது இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தர முடியாது என கனடா பாதுகாப்பு படையினர் கூறியதை தொடர்ந்து, தூதரகம் சார்பில் ஏற்பட்ட சில முகாம்களை இந்தியா ரத்து செய்துவிட்டது.காலிஸ்தான் பயங்கரவாதி கொலை தொடர்பான விவகாரத்தில் இந்தியா - கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிராம்ப்டன் நகரில் ஹிந்து சபை கோயில் பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் அங்குள்ள இந்தியர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்திய அதிகாரிகளின் வருகையை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கோயிலில் இருந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் கொடி கம்பங்களை வைத்து தாக்குதல் நடத்தினர். இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.இந்நிலையில், டொரன்டோ நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் முகாம்கள் நடத்த இந்தியா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த முகாம்களுக்கும், அதில் பங்கேற்பவர்களுக்கும் குறைந்த பட்ச பாதுகாப்பை கூட வழங்க முடியாது என கனடா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து இந்த முகாம்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அர்ச்சகர் சஸ்பெண்ட்

இந்நிலையில், பிராம்ப்டன் நகரில் கடந்த 3ம் தேதி கோயில் முன்பு மோதலின் போது வன்முறையை தூண்டியதாக அக்கோயில் அர்ச்சகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

WHISTLE COVER
நவ 08, 2024 15:21

கோவில் மோதலில் வன்முறையை தூண்டியது அந்த கோவிலுடைய அர்ச்சகர். அதற்காக சஸ்பென்ட். கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.


கத்தரிக்காய் வியாபாரி
நவ 07, 2024 22:39

எப்போவோ முடிச்சி வச்ச பிரச்சனையை நம்ம பப்பு அமெரிக்காவிற்கு சென்று திரும்பவும் பத்தவச்சுட்டு வந்துட்டார்.


சாண்டில்யன்
நவ 07, 2024 20:06

கொள்ளிக் கட்டையால் தலையை சொரிந்து கொண்டவர்கள் யாரு? பிரச்சினை யாரால் என்று எங்கு எப்படி ஆரம்பித்தது என்று தெளிவாக யாராவது இங்கு கருத்து சொல்வார்களா?


தாமரை மலர்கிறது
நவ 07, 2024 20:02

இதைத்தான் காலிஸ்தான் தீவிரவாதிகள் விரும்பினார்கள். அதையே இந்தியா செய்வது சரியல்ல. தூதரக அதிகாரிகள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று தான் காலிஸ்தான் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தார்கள். பிறகு வன்முறையில் ஈடுபட்டார்கள். அதற்கு பயந்து மக்களை பார்க்க இந்திய தூதரக அதிகாரிகள் மாட்டோம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?


SIVA
நவ 07, 2024 17:58

அப்ப இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் , கனடா சென்றவுடன் அவரகள் இலங்கை இந்துக்களாக மாறி விட்டார்களா , உங்களுக்கு துப்பு இருந்தால் இந்த பிரச்சனைய நீங்கள் சமாளியுங்கள் .......


sundarsvpr
நவ 07, 2024 16:37

ஒரு சமூக மக்களுக்காக மற்றுஒரு சமூகத்திற்கு ஒரு அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்கவில்லையென்றால் உலக மற்ற நாடுகள் அந்த நாட்டுடன் உறவை முறித்துக்கொள்வது ஒரு தார்மீக நடவடிக்கை. உலகம் தோன்றியுடன் ஒரு ஆண் பெண் தோன்றிருப்பார்கள். அவர்களின் வம்சாவளி உலகத்தின் எல்லா பிறப்பினங்களும் வேற்றுமை பாராட்டுவது உலகத்தில் சகோரத்துவம் கேள்விக்குரியது.


சாண்டில்யன்
நவ 07, 2024 21:42

நாற்பதாண்டு கால பழிதீர்க்க வேண்டுமா? பலனை அங்கே பல்லாண்டுகளாய் கடுங்குளிரிலும் பஞ்சம் பிழைக்கப் போனவர்கள் அனுபவிக்கிறார்கள் கலகம் நம் பிறவி குணம்


திருட்டு திராவிடன்
நவ 07, 2024 16:28

இங்குள்ள தத்தி போல அயோக்கியர்கள் உலகம் எங்கும் நிறைந்துள்ளார்கள்.


SUBBU,MADURAI
நவ 07, 2024 16:42

The Indian embassy in Canada had to cancel consular camps because the Canadian govt refused to provide security, despite threats. Trudeau has lost his senses and is playing with fire!


N.Purushothaman
நவ 07, 2024 16:06

கனடாவில் வசிக்கும் இலங்கை இந்துக்களை ஒன்றிணைக்க வேண்டும் ....அப்போது தான் இந்து ஓட்டு வங்கி உருவாகும் ....


சாண்டில்யன்
நவ 07, 2024 16:36

இங்குள்ள மீனவர்களுக்கு இலங்கை அரசு தரும் தொல்லைகள் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் இலங்கை இந்துக்களின் ஆதரவை கனடாவில் பெறவேண்டுமாம் இதுபோன்றவர்களின் அந்தரங்க ஏற்பாட்டில்தான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடாவடி தொடர்கிறதோ


Sathyanarayanan Sathyasekaren
நவ 07, 2024 23:11

சாண்டில்யன் மீனவர்கள் செய்யும் கடத்தல் செயல்கள் அய்யாவுக்கு தெரியாதோ? நேற்று கூட நிறைய கஞ்சா பைகள் கடல் கரையில் ஒதுங்கியதா வந்த செய்தியை படிக்கவில்லையா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை