உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாணவர் விசா திட்டத்தை நிறுத்தியது கனடா

மாணவர் விசா திட்டத்தை நிறுத்தியது கனடா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த ' student direct scheme' என்ற விசா திட்டத்தை கனடா அரசு நிறுத்தி உள்ளது.இந்தியா,பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்லைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பயில விரைவாக விசா வழங்கும் பொருட்டு இந்த திட்டத்தை அந்நாடு அறிமுகப்படுத்தியது.வழக்கமான விசா வழங்க பல மாதங்கள் ஆகும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் விரைவாக விசா வழங்கப்பட்டு வந்தது. பல நாடுகளில் இருந்து அங்கு வந்த நிலையில், கனடாவில் வீடு பிரச்னை, செலவு, சுகாதார பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து சர்வதேச மாணவர்களை கட்டுப்படுத்த அந்நாடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்த மாணவர் விசா திட்டத்தை ரத்து செய்வதாக அந்நாடு அறிவித்து உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்க விசா பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 10, 2024 07:46

திராவிட மாடல் காலை மதியம் சத்துணவு திட்டத்தை கனடா நாடு பின்பற்றியதாக யாரோ பெருமையாக சொன்னார்கள். இப்போது என்னடா என்றால் பாகிஸ்தான் காலிஸ்தான் தீவிர வாதிகள் இருக்கும் நாடு என்று சொல்கிறார்கள். ஒன்னுமே புரியலை.


Ramaswamy
நவ 10, 2024 06:50

Indian students must stop going to Canada for higher education. We are taking our life risk as Canada is not the same. Now tematically getting changed as a Terrorist Country with high influence of kalistanies and pakistanies. Trudeauo government is anti India. We can opt different other countries for education and even settlement.


RAJ
நவ 09, 2024 22:03

நிறுத்திக்கோ..யாருக்கு நட்டம்...எலன் மஸ்க் சொல்லியும் உமக்கு புத்தி வரல...


அப்பாவி
நவ 09, 2024 21:08

போனோமா படிச்சோமா திரும்பி வந்தோமான்னு இல்லாம அங்கேயே செட்டில் ஆயி கோவில், குருத்வாரா, மசூதின்னு கட்டி சண்டை போட்டு அவிங்களையே ஒழிச்சுக் கட்டிருவாங்க. நம்ன ஊரு தலிவர்களும் அங்கே போய் குட்டையைக் குழப்பிட்டு வருவாங்க. கனடா நாட்டுக்காரன் எத்தனை பேர் இங்கே வந்து படிக்கான்? வேலை கிடைச்சு செட்டில் ஆயிருக்கான்?


duruvasar
நவ 09, 2024 19:19

சீப்பு செந்தில் போர்முலா. நட்டம் செந்திலுக்குத்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை