உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது; கனடா பிரதமர்

அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது; கனடா பிரதமர்

ஒட்டாவா: 'அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறோம்,' என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையான நிலையில், அந்நாட்டுடன் அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இந்த நிலையில், கனடா உலகின் பிற நாடுகளுடனான புதிய உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது; உலகின் பிற நாடுகளுடன் புதிய உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம். உலகப் பொருளாதாரத்தில் 60 சதவீதப் பங்களிப்பை வழங்கும், வேகமாக வளர்ந்து வரும் ஆசிய பசுபிக் பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதை விட, சிறந்த இடம் வேறு இல்லை. இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, சீனாவுடனான உறவில் நிகழ்ந்த திருப்புமுனை ஆகியவற்றை உதாரணமாக கூறலாம். இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். நான் பிரதமர் மோடியை சந்தித்தது இல்லை. ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம்.அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்கும் தன்மையை மாற்ற வேண்டும். இது ஒரே இரவில் நடக்காது என தெரியும். ஆனால் நாங்கள் மிக விரைவாக முன்னேறி வருகிறோம், என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajasekar Jayaraman
நவ 04, 2025 11:26

மோடியை பார்த்து மற்றவர்களுக்கும் இப்போதுதான் புத்தி வருகிறது.


spr
நவ 03, 2025 19:01

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பது இல்லாமற் போய் "யாதும் ஊரோ யாவரும் பகைவரோ" என்றொரு நிலை உருவாகிறது. எவரையும் நம்பமுடியவில்லை நம்பாமலிருக்கவும் இயலவில்லை. நம்ம ஊரிலேயே எவரையும் நம்ப முடியவில்லை.உடன் பழகும் எல்லோரையும் அச்சத்துடனே பார்க்க வேண்டியிருக்கிறது நிரந்தரப் பகைவரும் இல்லை நிரந்தர நண்பர்களுமில்லை. இதுதான் உண்மை


Santhakumar Srinivasalu
நவ 03, 2025 13:01

காலிஸ்தானை தடை செய்தால் தான் கனடா உறுப்பட முடியும்!


ponssasi
நவ 03, 2025 11:54

கனியன் பூங்குன்றனார் கனவு வார்த்தை கனியும் காலம் வந்துகொண்டிருக்கிறது "யாதும் ஊரே யாவரும் கேளீர்"


கண்ணன்
நவ 03, 2025 11:10

இதற்கு முதலில் இவர் செய்ய வேண்டியது:கலிஸதான் போன்ற பயங்கரவாதக் கும்பல்களை ஆதரப்பதை நிறுத்தவேண்டும்


Baskaran
நவ 03, 2025 10:36

வாழ்த்துக்கள் கனடா


Rangarajan Cv
நவ 03, 2025 09:28

Hope rest of the world realizes ASAP. Better late than never.


duruvasar
நவ 03, 2025 09:12

அண்ணனlன் பிளே ஸ்கூல் அரிச்சுவடி ஆரம்பித்துவிட்டார்.


Ramesh Sargam
நவ 03, 2025 07:53

அமெரிக்காவை மட்டுமே நம்பி யாரும் இருக்கவேண்டாம் ட்ரம்பின் மிரட்டலுக்கு யாரும் பணியவேண்டாம்.


முக்கிய வீடியோ