உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனில் போர் நிறுத்தம்: ஐ.நா.,வில் புடினுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

உக்ரைனில் போர் நிறுத்தம்: ஐ.நா.,வில் புடினுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு,ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா வலியுறுத்தியது.ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில், புடினுடன் இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தினார். இந்நிலையில், உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு,ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா வலியுறுத்தியது.போர் நிறுத்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷ்யா தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க துணைத் தூதர் ஜான் கெல்லி பேசியதாவது: உக்ரைனில் அமைதியை உருவாக்க ரஷ்யாவுடன் நாங்கள் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இந்த மோதலுக்கு ராணுவ தீர்வு முடிவு அல்ல. அதே நேரத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை தொடர்ந்தால், அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தைகளில் இருந்து பின்வாங்கி கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Thravisham
மே 30, 2025 14:59

புடின் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறார்?


vbs manian
மே 30, 2025 09:27

இப்படி இன்னும் எவ்வளவு நாள் காதில் பூ சுற்றுவார்கள்


Nada Rajan
மே 30, 2025 08:36

போர் நிறுத்தம் கொண்டு வர அவசியம்


சமீபத்திய செய்தி