உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தத்தை மீறாதீர்கள்; ஈரான், இஸ்ரேலுக்கு டிரம்ப் வேண்டுகோள்

போர் நிறுத்தத்தை மீறாதீர்கள்; ஈரான், இஸ்ரேலுக்கு டிரம்ப் வேண்டுகோள்

வாஷிங்டன்: போர் நிறுத்தத்தை ஈரான், இஸ்ரேல் நாடுகள் மீறக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று விளக்கம் கூறியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d4a6klu0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறிதுநேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந் நிலையில், ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;போர் நிறுத்தம் தற்போது முதல் அமலுக்கு வந்துவிட்டது. அதை தயவு செய்து மீறாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை