மேலும் செய்திகள்
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்
4 hour(s) ago | 1
வார்சாவ், உலக செஸ் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கிராண்ட் மாஸ்டர் கேரி காஸ்பரோ, 60, சோவியத் ரஷ்யாவில் பிறந்தவர்; தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அரசியல் செயற்பாட்டாளராகவும் இருக்கும் இவர், ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து வருகிறார்.கடந்த ஆண்டு, நேட்டோ படை விவகாரம் தொடர்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அப்போது கேரி காஸ்பரோ, 'மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.ரஷ்யாவை உக்ரைன் தோற்கடித்து, அங்கு ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும்' என கூறினார். இந்நிலையில், ரஷ்யாவின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுக்கும் அரசு அமைப்பு, கேரி காஸ்பரோவை நேற்று பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது. இது குறித்து சமூக வலைதளத்தில் காஸ்பரோ, 'இது எனக்கு கிடைத்த கவுரவம். எதிர்ப்பவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றனர். இந்த நடவடிக்கை, புடினின் பாசிச அரசை பற்றி தெளிவாகக் கூறுகிறது' என பதிவிட்டுள்ளார்.
4 hour(s) ago | 1