ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: ஆக்ஸ்போர்டில் உள்ள ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் முதல்வர் உள்ளார். அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்த அவர், இன்று காலை ஆக்ஸ்போர்டு பல்கலை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவில் ஈவெரா படத்தை திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து 1839 ம் ஆண்டு தமிழகம் வந்து தமிழ் மொழி கற்று தமிழுக்கு சேவையாற்றிய ஜி.யு. போப்புக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜி.யு.போப்!19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்!தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்!தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்!ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா?அங்குள்ள ஜியு போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்…https://x.com/mkstalin/status/1963884262845009963இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.