உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குழந்தைகள் பலாத்காரம்: இந்திய இளைஞருக்கு 22 ஆண்டு சிறை

குழந்தைகள் பலாத்காரம்: இந்திய இளைஞருக்கு 22 ஆண்டு சிறை

லண்டன்:பிரிட்டன் தலைநகர் லண்டனில் குழந்தைகள் மற்றும் சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்து 'வீடியோ' எடுத்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிழக்கு லண்டனில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளி விருஜ் படேல், 26. இவர் தன் மொபைல் போனை பழுதுபார்க்க அங்குள்ள கடையில் கொடுத்திருந்தார். அதை கடை ஊழியர் ஆய்வு செய்தபோது, மறைத்து வைக்கப்பட்ட கோப்புகள் பல இருந்துள்ளன. அவற்றை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் இருந்தன. அந்த மொபைல் போன் விருஜ் படேலின் அண்ணன் கிஷண் படேலுக்கு சொந்தமானது. ஒரு வீடியோவில் விருஜின் முகம் பதிவாகி இருந்தது. இதையடுத்து பழுது பார்க்கும் ஊழியர் மான்செஸ்டர் போலீசுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, விருஜ் படேல் குற்றத்தை ஒப்புக் கொண்டார். கடந்த, 2018ல் இருந்து இந்த குற்றத்தி ல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், விருஜ் படேலுக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காக கிஷண் படேலுக்கு, 5 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ