உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  குழந்தைகள் பலாத்காரம்: அமெரிக்கருக்கு 965 ஆண்டு

 குழந்தைகள் பலாத்காரம்: அமெரிக்கருக்கு 965 ஆண்டு

அலபாமா: சிறுமியரை பலாத்காரம் செய்தது, பாலியல் ரீதியில் துன்புறுத்தியது, ஆபாச படங்களை வெளியிட்டது என, 84 வழக்குகளில், அமெரிக்காவைச் சேர்ந்தவருக்கு, 965 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணம் டீட்ஸ்வில்லேயைச் சேர்ந்தவர் ஜேசன் ஹட்சன், 48. இணையதளத்தில் சிறுமியரின் ஆபாச படங்களை வெளியிட்டது தொடர்பாக, இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. இவர், 12 வயதுக்குட்பட்ட சிறுமியர் பலரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். அதில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவர். சவுக்கால் அடிப்பது, நெருப்பால் சுடுவது போன்ற சித்ரவதையும் செய்துள்ளார். மேலும், பலரை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவற்றை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். அவரிடம் இருந்து ஆயிரக்கணக்கான ஆபாச படங்கள், வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. அவர் மீது தொடரப்பட்ட, 84 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு, 965 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி பாரென் ஜில் ஹட்சனுக்கு, 37, நீதிமன்றம், 30 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ