உலகளாவிய திறமையாளர்களுக்கு கதவை திறந்து விடுகிறது சீனா: அமெரிக்கா இழந்ததை கைப்பற்ற தந்திரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: அமெரிக்காவின் எச்1பி விசா குழப்பங் களுக்கு மத்தியில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா 'கே' எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தி, வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=94z3dr0x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எச்1பி விசா வைத்துள்ளவர்களில் இந்தியாவிற்கு அடுத்து சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து, இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களை தன் பக்கம் ஈர்க்க, நம் அண்டை நாடான சீனா ஒரு புதிய வகை விசாவை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. எளிய நடைமுறை
சீனாவில் தற்போது 12 வகை சாதாரண விசாக்கள் கிடைத்து வருகின்றன. இந்த விசாக்களுடன் கே எனும் வகை விசாவை சேர்க்க அந்நாடு முடிவு செய்துள்ளது. இந்த விசா மற்ற விசாக்களுடன் ஒப்பிடுகையில், எண்ணிக்கை, செல்லுபடியாகும் காலம், தங்கும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும். எச்1பி விசாவைப் போன்று இல்லாமல், இந்த கே விசா மிகவும் எளிமையான மற்றும் நெகிழ்வான நடைமுறைகளை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரருக்கு சீனாவில் உள்ள எந்த ஒரு நிறுவனத்தின் ஆதரவும் தேவையில்லை. இதற்காக வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்கான ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கான உத்தரவில் சீன பிரதமர் லி கியாங் கையெழுத்திட்டுள்ளார். இப்புதிய விதிகள் வரும், அக்டோபர், 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி
கே விசாவில் சீனாவிற்கு செல்பவர்கள் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும், அது தொடர்புடைய தொழில்முனைவோர் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான பரிமாற்றங்களிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவர். இந்த விசாவிற்கான விண்ணப்பதாரர்கள் சீன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜ்ஜிய விசா கட்டணத்தை பரிசீலிக்கிறது பிரிட்டன்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் எச்1பி விசா கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தினார். இதையடுத்து, தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர் திறன் பணியாளர்கள் மத்தியில் கவலையெழுந்துள்ள நிலையில், இத்தகைய பணியாளர்களுக்கான விசா கட்டணத்தை முழுமையாக நீக்குவது குறித்த புதிய திட்டத்தை ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின்படி, குறிப்பாக தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரி அறிவியல் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச திறமையாளர்களுக்கு, பூஜ்ஜிய விசா கட்டணத்தை செயல்படுத்துவது குறித்து, பிரிட்டன் அரசு ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இத்திட்டம், உயர் திறன் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிதி தடைகளை நீக்கி, அவர்களின் குடியேற்ற செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்கா செல்ல திட்டமிடும் திறமையான பணியாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நிலையான இடமாக பிரிட்டன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இம்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திறமையாளர்களை இதன் வாயிலாக ஈர்ப்பதே பிரிட்டனின் முதன்மையான நோக்கமாகும். உலகளாவிய திறமைவாய்ந்த பணியாளர்களுக்கான விசா கட்டணம் தற்போது பிரிட்டனில், இந்திய மதிப்பில் 91,155 ரூபாயாக உள்ளது. குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் இதே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பிரட்டனில் 19 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.