உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிகப்பெரிய நீர்மின் அணை திபெத்தில் கட்டுகிறது சீனா

மிகப்பெரிய நீர்மின் அணை திபெத்தில் கட்டுகிறது சீனா

பீஜிங் தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இது, இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது திபெத். இங்கு ஓடும் யார்லாங் ஜாங்க்போ நதியில், பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா, 2020ல் திட்டமிட்டது. மிகவும் சிக்கலான வடிவமைப்பு காரணமாக தாமதமாகி வந்த நிலையில், தற்போது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, இந்த நதியில் இருந்து ஆண்டுக்கு 30,000 கோடி கிலோவாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இது, உலகின் மிக பிரமாண்டமான நீர்மின் உற்பத்தி செய்யும் அணையாக விளங்கும்.தற்போது மத்திய சீனாவின், 'த்ரீ கார்ஜஸ் டாம்' என்ற அணைதான் உலகின் பெரிய நீர்மின் அணையாக உள்ளது. அதைவிட, இது மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என, கூறப்படுகிறது.இந்த நதி, 50 கி.மீ., தொலைவுக்குள், 6,561 அடிக்கு கீழே விழுகிறது. அதனால், இந்த இடத்தில் நீர்மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அந்த இடத்தின் புவியியல் அமைப்பு, அணை கட்டுவதற்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தாமதமாகி வந்த நிலையில், திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக சீனா தற்போது கூறியுள்ளது.த்ரீ கார்ஜஸ் டாம் கட்டுமானத்தின்போது, 14 லட்சம் பேரை இடமாற்றம் செய்ய நேர்ந்தது. தற்போதைய திட்டத்தில், அதைவிட அதிகமானோர், புலம்பெயர நேரிடும் என்று கூறப்படுகிறது.திபெத்தில் ஓடும் இந்த நதி, நம் நாட்டின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்கள் வழியாக வங்கதேசத்துக்குள் பாய்கிறது. இங்கு, பிரம்மபுத்ரா என்று அது அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை