உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் வரலாறு காணாத பருவமழை; வீடுகளை இழந்த 80,000 பேர்

சீனாவில் வரலாறு காணாத பருவமழை; வீடுகளை இழந்த 80,000 பேர்

பீஜிங்; சீனாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி 80,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்துள்ளனர்.சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அந்நாட்டின் ஹூனான், ஹூபே மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.தெற்கு சீனாவில் உள்ள குய்சூ மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 80,000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கோன்ஜியங், ரோன்ஜியங் நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. அங்கு பாயும் ஆறுகளின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, தாழ்வான பகுதிகளில வசிக்கும் ஏராளமான மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
ஜூன் 26, 2025 11:50

எங்கே நம்முடைய உண்டியல் குலுக்கிகள? மக்கள் மழையில் கஷ்டப் படும்போது ராணுவத்திற்குச் செலவு ஒரு கேடா என்ற கூக்குரலைக் கணோம்!


Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:43

வீடுகளை இழந்தவர்களுக்கு உதவ இந்தியா உடனே புறப்பட்டுவிடுமே மற்றவர்களுக்கு உதவுவது என்றால் இந்தியா, எதிரி நாடு என்றும் பார்க்காது. அதுவும் ஒருவகை சனாதன தர்மம்தான். அதை உதவி பெரும் நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு பயந்து உதவுகிறோம் என்று அவர்கள் நினைத்துவிடக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை