உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சீனா: வேலையில்லா பட்டதாரிகள் அதிகரிப்பால் புதிய சிக்கல்

 சீனா: வேலையில்லா பட்டதாரிகள் அதிகரிப்பால் புதிய சிக்கல்

பீஜிங்: விசா மற்றும் வேலைவாய்ப்பு தடைகளால், வெளிநாடுகளில் கல்வி பயின்று நாடு திரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வேலையின்மை பிரச்னை தீவிரமாகியுள்ளது. வெளிநாடுகளில் படித்து முடிக்கும் சீன மாணவர்கள், அங்கு விசா மற்றும் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால், வேறு வழியில்லாமல் தாயகம் திரும்புகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அவர்கள் வேலை வாய்ப்புகளை தேடவும், தொழில்களை துவங்கவும் உதவிடும் வகையில் ஒரு சிறப்பு தளத்தை சீன அரசு துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், வெளிநாடுகளில் கல்வி பயின்ற, 4.95 லட்சம் பேர், சீனா திரும்பியுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 19.10 சதவீதம் அதிகம் எனவும் அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 1978 முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 74 லட்சம் சீன மாணவர்கள் வெளிநாடுகளில் தங்கள் படிப்பை முடித்துள்ளதாககவும், அதில், 64 லட்சம் பேர் சீனா திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை