உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனா ரூ.337 கோடி ஊழல் வழக்கில் மாஜி அமைச்சருக்கு மரண தண்டனை

சீனா ரூ.337 கோடி ஊழல் வழக்கில் மாஜி அமைச்சருக்கு மரண தண்டனை

பீஜிங்: தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, 337 கோடி ரூபாய் ஊழல் செய்த வழக்கில், சீனாவின் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் அதிபராக ஷீ ஜின்பிங் 2012ல் பதவிக்கு வந்ததில் இருந்து, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில், உயர் ராணுவ அதிகாரிகளும் அடங்குவர். இந்நிலையில், தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து, 337 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை அமைச்சரான டாங் ரென்ஜி யனுக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், பல பதவிகளில் இருந்தபோது, அவர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அதே நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உத்தரவை செயல்படுத்துவதை ஒத்தி வைப்பதாக கூறியுள்ளது. மேலும், சட்டவிரோதமாக பெற்ற சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sasikumaren
செப் 29, 2025 18:12

இந்த மரண தண்டனை இந்தியாவில் கிடைத்தால் தமிழகத்தில் மட்டும் ஐநூறு லஞ்ச பேய்களுக்கு நேரிடையாக தூக்கு தண்டனையே தரலாம்


Ramesh Sargam
செப் 29, 2025 11:30

இந்தியாவில் இப்பொழுது நடைமுறையில் உள்ள அந்தக்காலத்து, ஹைதர் அலி காலத்து பேச்சுக்கு குறிப்பிடுகிறேன்... சட்டங்கள் மாற்றப்பட்டு, இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு, முந்தைய ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், இப்பொழுது ஆட்சியில் ஊழல் செய்பவர்கள் அனைவரும் இப்படி கடுமையாக தண்டனை பெறவேண்டும்.


Amruta Putran
செப் 29, 2025 08:46

If the same law brought to India, no one will remain in Kattumaram’s family and party, similarly Pappu’s family and party ?


திகழும் ஓவியம்
செப் 29, 2025 08:24

அதெல்லாம் இங்கே சும்மா. மாட்டு தீவன ஊழல் செய்தவன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ஜாமீனில் வெளியே வந்து ஓட்டு திருட்டு பற்றி பேசுகிறான். அலை கற்றை ஊழல் செய்தவன் யோக்கியன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை