உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன மக்கள் தொகை பாதியாக குறையும்: ஐ.நா., கணிப்பு

சீன மக்கள் தொகை பாதியாக குறையும்: ஐ.நா., கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: வரும் 2100ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை, இப்போது இருப்பதில் பாதியாக குறைந்து விடும் என்று ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த 2021ல் சீன மக்கள் தொகை 141 கோடியாக இருந்தது. அதன்பிறகு மக்கள் தொகையில் சரிவு ஏற்படத் தொடங்கியது. 2025ல் சீன மக்கள் தொகை, 136 கோடி என்ற நிலையை எட்டி விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.வரும் ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை கடுமையான சரிவை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அரசின் குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள், வாழ்க்கைச் செலவுகள், சீர்குலைந்த குடும்ப நடைமுறைகள் காரணமாக, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.இதன் விளைவாக, 2100ம் ஆண்டில் (இன்னும் 76 ஆண்டுகளில்) சீனாவின் மக்கள் தொகை, தற்போதைய நிலையில் இருப்பதில் பாதியாக குறைந்து விடும் என்று ஐ.நா., மதிப்பீடு செய்துள்ளது.மக்கள் தொகை குறைவு காரணமாக, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்; முதியோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதாரம், பென்சன் திட்டம், சுகாதார திட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

என்றும் இந்தியன்
நவ 19, 2024 17:17

இந்தியாவில் 1947ல் முஸ்லிம்கள் 1 கோடி இன்று 21 கோடி முஸ்லீம் அல்லாத இந்து சீக்கியர் புத்தர் சமணர் 34 கோடி இன்று 122 கோடி . அதாவது முஸ்லிம்கள் 4% வருடம் ஜனத்தொகை அதிகரிப்பு முஸ்லீம் அல்லாதவர்கள் அதே விகிதத்தில் என்றிருந்தால் இன்று 2024 ல் அவர்கள் 696 கோடி இருந்திருக்கவேண்டும். இப்போது அவர்கள் ஜனத்தொகை கிருத்துவர்களையும் சேர்த்து 122 கோடி மட்டும் தான் அதாவது 1.7% அதிகரிப்பு. இதே விகிதத்தில் சென்றால் 2100ல் இந்தியாவில் முஸ்லிம்கள் 403 கோடி முஸ்லீம் அல்லாதவர்கள் இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த சமண மதத்தவர்கள் 448 கோடி


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 20, 2024 11:10

உங்கள் கணிப்பு சரியாக இருந்தால் நமது நாட்டின் முஸ்லிம்கள் 403 கோடி சீனாவை கைப்பற்றி ஷரியத் சட்டம் கொண்டு வந்து விடும் 2100ல்.


MUTHU
நவ 19, 2024 16:10

இன்னைக்குத்தான்யா ஆக்கமா பேசியிருக்க.


Jay
நவ 19, 2024 15:00

சீனாக்காரன் அதை பார்த்து கொள்ளுவான். நம்ம நாட்டு பிரச்சினையை பேசலாம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 14:21

கடைசி பாராவில் உள்ள வல்லுநர்கள் கணிப்பு அனைத்தும் தவறு. AI தொழில் நுட்பம், டிரைவர் இல்லாத டாக்சி, சர்வர் இல்லாத ஹோட்டல், கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட், பேங்க் எல்லாம் வந்து கொண்டிருக்கும் போது, மக்கள் தொகை குறைவது மிகவும் நல்லது.


Duruvesan
நவ 19, 2024 18:46

உங்க கும்பல் பெத்து போட்டு பெருகிட்டே இருக்கு.


Indian
நவ 19, 2024 13:38

இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம், அளவுக்கு அதிகமான மக்கள் தொகை. ரயில்வே ப்ளட்போர்ம்களிலும், நடை பாதைகளிலும் தூங்கும் மக்கள் ..எப்படி நாடு முன்னேறும்? உ பி , பீகார் , மற்றும் வட மாநிலங்களில் மக்கள் தொகை மிக அதிகம் ..கட்டுப்பாடு என்பதே இல்லை ..


ஆரூர் ரங்
நவ 19, 2024 16:26

அமெரிக்காவிலும் ஒரு கோடி பேருக்கு மேல் நடைபாதைவாசிகள்தான்.


Janarthanan
நவ 19, 2024 21:44

இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் ஊழல்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 20, 2024 11:37

இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் நாட்டு மக்கள் இடையே ஒழுங்கின்மை தான் காரணம். ஒழுக்கம் மற்றும் ஒழுங்குமுறை மக்களிடையே இருந்தால் நமது நாடு ஜப்பானை விட ஆயிரம் மடங்கு முன்னேறி இருக்கும். ஜப்பானில் சுனாமி வெள்ளம் பேரிடர் காலத்தில் அரசு வினியோகிக்கும் உணவு பொருட்கள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் வாங்கி உபயோகிப்பார்கள். கடைகளில் பணம் கொடுத்து வாங்கும் உணவு பொருட்கள் பேரிடர் காலங்களில் அன்றைய தேவைக்கு ஏற்ப எவ்வளவு பெரிய பணக்காரணகா இருந்தாலும் வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால் நம்மிடையே இது போன்ற நல்ல பழக்கங்கள் உள்ளதா? நாம் நமது குழந்தைகளுக்கு இது போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் சொல்லி கொடுத்துள்ளோமா? குப்பைகளை குப்பை தொட்டி தேடி போட வேண்டும் என்ற அடிப்படை கருத்தையாவது பழக்கத்தையாவது நமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்துள்ளோமா. சாலையில் அடுத்தவர் இடத்தில் போடத்தானே பழக்கப்படுத்தி உள்ளோம்.


Anand
நவ 19, 2024 13:36

அங்கே மூர்க்கங்களை வெளுத்து வாங்கி வழிக்கு கொண்டு வருகிறான் ஜன தொகை குறைகிறது நாடு செழிப்படைகிறது, இங்கே ஒட்டுப்பிச்சைக்காக மூர்க்கங்களை/கள்ளக்குடியேறிகளை தூக்கிப்பிடித்து ஊக்குவிக்கிறான் ஜனத்தொகை இரட்டிப்பாகிறது நாடு அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.....


Haja Kuthubdeen
நவ 19, 2024 15:49

ஆக ஆக மூர்கங்கள் இன்னும் 50 ஆண்டுகளில் பல்கி பெருகி அச்சுறுத்தலா மாறப்போகிறார்கள் அப்படிதானே ..செய்தி சீனாவை பற்றி..


என்றும் இந்தியன்
நவ 19, 2024 17:01

100% சரியான வார்த்தை ஆனந்து


Kumar Kumzi
நவ 19, 2024 17:22

இந்தியா அழிவதை யாராலும் தடுக்க முடியாது இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் அதுதான் நடக்கிறது


Sivagiri
நவ 19, 2024 13:20

நம்மை போல, எதுக்கும் உதவாத குடிகார ஜனங்களை, ஓட்டுக்காக மட்டும் வைத்துக்கொண்டு, வேலை செய்ய பங்களாதேசிகளை கொண்டு வர மாட்டாய்ங்க


Sivagiri
நவ 19, 2024 13:18

எத்தனை வருஷங்கள் ஆனாலும் வெளி ஆட்கள் உள்ளே நுழைய முடியாது, கன்வெர்ட்டிஸ்டுகளோ, ஜிஹாதிகளோ, கால் வைக்க முடியாது... அப்டியே வேலைக்கு, சண்டைக்கு, ஆள் பற்றாகுறைன்னா, மெஷின்கள், ரோபோட்டுக்களை தயாரித்து வைத்து கொண்டு, நிம்மதியா இருப்பாய்ங்க, குழப்பம் விளைவிக்கும் கும்பல்களை உள்ளே விடவே மாட்டாய்ங்க . . .


Kumar Kumzi
நவ 19, 2024 12:38

கவலை படாதீங்க ...


Senthoora
நவ 19, 2024 12:13

இங்கே கவனிக்க படவேண்டியது, சீனாவில் மக்கள் தொகை குறையலாம். ஆனால் சீனர்களின் மக்கள் தொகை புலம்பெயர்ந்த நாடுகளில் கூடிக்கொண்டு போகிறது. சீனாவில் ஒரு பிள்ளையுடன் நீட்பாட்டி விடுவார்கள். புலம் பெயர்ந்து 3 அல்லது 4 பிள்ளைகள் பெற்று தள்ளுகிறார்கள்.