உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  விண்வெளி நிலையத்தில் சிக்கிய சீன வீரர்கள் பத்திரமாக திரும்பினர்

 விண்வெளி நிலையத்தில் சிக்கிய சீன வீரர்கள் பத்திரமாக திரும்பினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: விண்கலத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக, 'டியாங்கோங்' விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட மூன்று சீன விண்வெளி வீரர்கள், மாற்று விண்கலம் வாயிலாக பூமிக்கு நேற்று பத்திரமாக திரும்பினர். பல்வேறு நாடுகளுடன் கூட்டாக சேர்ந்து அமெரிக்கா உருவாக்கிய ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச விண்வெளி நிலையத்தை தவிர, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கென பிரத்யேகமான தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கி நிர்வகித்து வருகிறது. சீனாவின் விண்வெளி நிலையத்திற்கு, 'டியாங்கோங்' என்று பெயர். இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக, ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்று முறையில் சீன விண்வெளி வீரர்கள் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், சீன விண்வெளி வீரர்களான சென் டோங், சென் ஜோங்ருய் மற்றும் வாங் ஜீ ஆகியோர், 'ஷென்சோ - 20' விண்கலம் வாயிலாக கடந்த மே 3ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டனர். அங்கு, ஆறு மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 5ம் தேதி பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டு இருந்தனர். அந்த நேரத்தில், அவர்கள் சென்ற விண்கலத்தின் மீது, விண்வெளி குப்பைகள் மோதியதில் சேதம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் பூமிக்கு திரும்புவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஒன்பது நாட்கள் அங்கேயே அவர்கள் தங்க நேரிட்டது. இந்நிலையில், அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, 'ஷென்சோ - 21' என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. இதில், நேற்று புறப்பட்ட மூன்று வீரர்களும், வடக்கு சீனாவில் உள்ள மங்கோலியாவின் டோங்பெங் என்ற தரையிறங்கும் தளத்தில் பத்திரமாக தரையிறங்கினர். மூன்று வீரர்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த, 'ஷெ ன்ஷோ - 20' விண்கலம் பூமிக்கு திரும்புவது பாதுகாப்பற்றது என்று கருதப்பட்டதால், மேலும், சோதனைகள் செய்வதற்காக அது விண்வெளியிலேயே விடப் பட் டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை