உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சி வீடியோவால் வந்த வம்பு; சி.இ.ஓ.,வைத் தொடர்ந்து ஹெச்.ஆர்., ராஜினாமா!

கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சி வீடியோவால் வந்த வம்பு; சி.இ.ஓ.,வைத் தொடர்ந்து ஹெச்.ஆர்., ராஜினாமா!

வாஷிங்டன்: கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சையில் சிக்கிய அஸ்ட்ரானமர் நிறுவனத்தின் சி.இ.ஓ., ராஜினாமாவைத் தொடர்ந்து, தற்போது ஹெச்.ஆர்., தலைமை பொறுப்பில் இருந்து கிறிஸ்டின் காபோட் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டனில் நடந்த கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சியில், அஸ்ட்ரானமர் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆண்டி பைரன், தனது நிறுவனத்தின் பெண் ஹெச்.ஆர்., கிறிஸ்டின் காபோட்டுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம், இருவரும் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, அஸ்ட்ரானமர் நிறுவனத்தின் சி.இ.ஓ., பதவியை ஆண்டி பைரன் ராஜினாமா செய்தார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நடத்தை மற்றும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை நிர்வாகம் எதிர்பார்ப்பதாகவும், புதிய சி.இ.ஓ.,வுக்கான தேடல் நடந்து வருவதாக அஸ்ட்ரானமர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அஸ்ட்ரானமர் நிறுவனத்தின் ஹெச்.ஆர்., தலைமை பொறுப்பில் இருந்து கிறிஸ்டின் காபோட் ராஜினாமா செய்துள்ளார். இதனை அஸ்ட்ரானமர் உறுதி செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'கிறிஸ்டின் காபாட் இனி அஸ்ட்ரானமரில் இல்லை. அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஏற்கனவே, ஆண்டி பைரன் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார். நிர்வாகக் குழு அதை ஏற்றுக்கொண்டது. இணை நிறுவனர் பீட் டிஜாய் தற்காலிக சி.இ.ஓ.,பணியாற்றுவார். நிர்வாகக் குழு அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்யும்,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tiruchanur
ஜூலை 25, 2025 13:05

கர்மம்.


Jack
ஜூலை 25, 2025 11:48

திருமணம் தாண்டிய உறவுக்கு ஆதரவா இருக்கும் மீசைக்கார தாத்தா கொஞ்ச நாளா அமெரிக்காவில் இருப்பதாக செய்தி ..அதன் தயக்கமா


தியாகு
ஜூலை 25, 2025 10:56

விவரம் தெரியாத ஆளா இருந்திருக்காரு. டுமிழ்நாட்டில் ஒரு தலைவர் வளர்ப்பு மகள் என்று சொல்லி உருட்டியதுபோல அவர் எனது வளர்ப்பு மகள் என்று அந்தர் பல்டி அடித்திருக்கலாம்


Anand
ஜூலை 25, 2025 11:18

அமெரிக்கர்களுக்கு திராவிஷ பாசறை பயிற்சி மிகவும் அவசியம்.


Ganapathy
ஜூலை 25, 2025 10:48

பழைய செய்திகள் சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் சுற்றி வருவதற்கு இது ஒரு உதாரணம். புதிய செய்தியாக எங்கு வேலைக்கு சேர்ந்தார் என்பதை இந்த தழிழ் கூறும் நல்லுகத்தின் மீட்சிக்காக போடவும்.


Premanathan S
ஜூலை 25, 2025 10:38

அமெரிக்கர்கள் பொது வாழ்வில் ஒழுக்கம் எதிர் பார்ப்பவர்கள் நமது ரசிகர் கதை அங்கே எடுபடாது


தத்வமசி
ஜூலை 25, 2025 10:16

நல்லொழுக்கம் என்பது சிறு வயது முதலே கடை பிடிக்க வேண்டியது. இதை கிழவனாகிய பிறகு தான் கடை பிடிக்க வேண்டும் என்றால் எப்படி ஆசைக்கு அணை போடுவது. வெளியே தெரிந்ததால் மாட்டிக் கொண்டார்கள். இல்லையென்றால் என்ன ஒழுக்கத்தினை எதிர் பார்க்க இயலும் ? எல்லாம் அழுக்கு தான்.


புதிய வீடியோ