உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2025ல் விசா தேவையில்லை; இந்தியர்களுக்கு ரஷ்யா புது ஆபர்

2025ல் விசா தேவையில்லை; இந்தியர்களுக்கு ரஷ்யா புது ஆபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்ய அரசின் முடிவு காரணமாக 2025ம் ஆண்டில் இந்தியர்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டுக்கு பயணிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.கல்வி, தொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ரஷ்யா செல்கின்றனர். தங்கள் நாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு சுற்றுலா வருவதை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, விசா இல்லாமலேயே இந்தியர்கள் ரஷ்யாவுக்கு செல்ல முடியும். அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாக குழு தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறியதாவது: இந்தியர்களுக்கு விசா இல்லாமல் ரஷ்யா வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் தயாராகி வருகிறது. விரைவில் அது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நீண்ட கால நல்லுறவு காரணமாக, இந்தியாவை மிக முக்கிய சுற்றுலா சந்தையாக ரஷ்யா கருதுகிறது.விசா இல்லாமல் ரஷ்யா வர அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். நடப்பு ஆண்டில் இதுவரை 28,500 இந்திய பயணிகள் மாஸ்கோவிற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.5 மடங்கு அதிகம். கடந்த ஆண்டில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இது 2022ம் ஆண்டை விட 26 சதவீதம் அதிகம்.கடந்த ஆண்டு முதல் இந்தியர்களுக்கு இ-விசா வழங்கப்படுகிறது. இத்தகைய விசா விண்ணப்பித்து 4 நாட்களில் வழங்கப்பட்டு விடும். கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் 9,500 பேருக்கு இ-விசா வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் 1700 விசாக்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

VARADHARAJANAYATHURA
அக் 30, 2024 08:00

make on line visa process for concept like "preferential visa for entry into RUSSIA" for Indian nationals on education and job opportunities for the required minimum contract period as agreed and sanctioned by the Russian employers and educational institutions


அப்பாவி மியாவ்ஸ்க்கி
அக் 28, 2024 22:07

போனா புடிச்சு மிலிட்டரில சேர்த்துடுவாங்க.


Ravichandran Perumalsamy
அக் 28, 2024 19:09

ரஷ்ய அதிபர் புத்தின் அவர்களே முதலில் போரை நிறுத்துங்கள்


Nagar
அக் 29, 2024 09:38

அவர் நாடு, அவர் மக்கள் மற்றும் இறையாண்மை...நீர் என்ன கருத்துச்சொல்ல வரலாறு ,காரணம் தெரியாமல்..


ديفيد رافائيل
அக் 28, 2024 16:38

Visa பற்றி clearly news போடுங்க


Ramesh Sargam
அக் 28, 2024 11:44

எனக்கு புரியவில்லை, விசாவே ஒட்டுமொத்தமா வேண்டாமா அல்லது on arrival visa வா என்று தெளிவுபடுத்தவும்.


Sundar R
அக் 28, 2024 11:30

விசா செலவு மிகவும் குறைவு. அதை கட்டணம் பெறாமல் வழங்குவது ஒரு பெரிய விஷயமல்ல.விமானக் கட்டணங்களையும், உணவு & தங்கும் ஹோட்டல் செலவுகளை ஓரளவு குறைப்பது நம் போன்ற பாரத நாட்டிலிருந்து ரஷ்யா வரும் பயணியர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.


RAJAN
அக் 28, 2024 10:42

ரஷ்ய போலீஸ் மோசமானவங்க விசா இருந்து போனாலே அவங்க கிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான் என்ன ஏதுன்னு கூட கேட்க மாட்டான் நேரா ஜெயில்தான்.


RAAJ68
அக் 28, 2024 10:41

அப்படியே விமான கட்டணமும் இல்லாமல் பயணிக்க வழி செய்தால் நன்றாக இருப்பீர்கள்.


கிஜன்
அக் 28, 2024 09:58

70 வருஷத்துக்கு மேல உங்களோட நட்போட இருக்கோம் .... இப்ப தான் உங்களுக்கு விலை இல்லா விசா தரணும்ன்னு தோணியிருக்கு .... இது தான் ஜி - ஜெய் மாஜிக் ...


புதிய வீடியோ