உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியா அதிபர் மாளிகையில் புகுந்த மக்கள் கூட்டம்; பொருட்களை அள்ளிச் சென்றனர்

சிரியா அதிபர் மாளிகையில் புகுந்த மக்கள் கூட்டம்; பொருட்களை அள்ளிச் சென்றனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில், அவரது மாளிகைக்குள் நுழைந்த மக்கள், கைகளில் சிக்கிய பொருட்களை அள்ளிச் சென்றது தெரியவந்துள்ளது.டமாஸ்கஸ் நகரில் இருந்த ஆசாத்தின் தந்தை சிலைகளை கிளர்ச்சியாளர்கள் அடித்து நொறுக்கினர். மத்திய கிழக்கு ஆசிய நாடான சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. அதிபராக இருந்த பஷர் அல் ஆசாத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி வந்தனர். துருக்கி ராணுவத்தினர் உதவியுடன் அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்றி வந்த கிளர்ச்சியாளர்கள், இன்று தலைநகர் டமாஸ்கசையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதிகாரத்தை கைப்பற்றினர்.இதனையடுத்து, பஷர் அல் ஆசாத் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.இதையறிந்த அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அம்மாளிகையில் ஏராளமான அறைகள் உள்ள நிலையில் ஒவ்வொரு அறையாக சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

சிலைகளை நொறுக்கிய கிளர்ச்சியாளர்கள்

சிரியாவின் முன்னாள் அதிபரும், பஷர் அல் ஆசாத்தின் தந்தையுமான ஹபீஸ் அல் ஆசாத் சிலை தலைநகர் டமாஸ்கஸ் நகரில் பல இடங்களில் இருந்தது. இந்நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி முன்னேறிய நிலையில், சிலைகள் அனைத்தையும் நொறுக்கி சாலைகளில் வீசினர். மேலும் அந்த உடைக்கப்பட்ட சிலையின் பாகங்களை சாலையில் போட்டு இழுத்துச் சென்றனர். ஹபீஸ் அல் ஆசாத், 1970ல் புரட்சி மூலம் சிரியா ஆட்சியை கைப்பற்றிய நிலையில் 2000ம் ஆண்டு அவர் மரணம் அடையும் வரை நாட்டின் அதிபர் ஆக இருந்தார்.

கைதிகள் விடுதலை

டமாஸ்கஸ் நகருக்குள் வந்த கிளர்ச்சியாளர்கள், அங்கு உள்ள செட்னாயா சிறையில் இருந்து கைதிகளை விடுவித்தனர். இவர்கள் அனைவரும் ஆசாத் அரசுக்கு எதிராக போராடியவர்கள் எனக்கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் நுழைந்தனர். அங்கு இருந்த ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படங்களை வீசி ஏறிந்து சேதப்படுத்தினர்.

ஊரடங்கு

டமாஸ்கஸ் நகரில் உள்ள சிரியாவின் ரிசர்வ் வங்கிக்குள் புகுந்த ஏராளமானோர் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

vbs manian
டிச 08, 2024 21:39

பங்களா தேஷில் ஷேக முஜிபுர் ரஹ்மான் சிலை சிதைக்கப்பது. இராக்கில் சதாம் ஹுசைன் சிலை உடைப்பு. சிரியாவில் அதிபர் சிலை படங்கள் சிதைப்பு. இந்தியாவிலும் நிறைய சிலைகள் உள்ளன.


Ramesh Sargam
டிச 08, 2024 21:03

தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு நிலை வரும், கூடிய சீக்கிரம்.


kulandai kannan
டிச 08, 2024 20:33

இனிமேல் யாரும் புதிய சிலைகள் வைப்பதற்குமுன் யோசிப்பது நல்லது. ஏதோ மனதிற்குத் தோன்றியதைச் சொல்லிவிட்டேன்.


Bye Pass
டிச 09, 2024 11:17

இனி குச்சி மிட்டாய் அல்லது கமர்கட்டில் சிலை வைக்கணும் ..


ALWAR
டிச 08, 2024 19:14

இந்தியாவில் என்று சுரண்டல் , ஊழல் குடும்ப அரசியல்வாதிகளுக்கு எதிராக நடக்கும் ?


Venkataraman
டிச 08, 2024 18:40

ஆணவத்தால் ஆட்டம் போடும் அரசியல் தலைவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். குடும்ப ஆட்சி நடத்தி கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கும் இதுதான் கதி.


Kumar Kumzi
டிச 08, 2024 18:29

முகம் எப்போதுமே சமாதானமா வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை


ராமகிருஷ்ணன்
டிச 08, 2024 18:22

அக்கிரம ஊழல் ஆட்சிக்கு எதிராக பொது மக்களின் ஆவேச எதிர்ப்பு இலங்கையில் நடந்தது, சிரியாவில் நடக்கிறது, தமிழகத்தில் எப்போது.


sankar
டிச 08, 2024 18:16

வனகாலதேசம், இப்போது சிறியா - சிறிய மனத்துடையவர்கள் என்பது தெளிவாகிறதா


theruvasagan
டிச 08, 2024 17:35

ஜனநாயகத்தை முற்றிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு குடும்ப வாரிசு அரசியல் செய்த பல தலைகள் மக்கள் விழித்துக் கொண்டதில் உருண்டுவிட்டன. உதாரணம் பிலிப்பைன்ஸ் இலங்கை பங்களாதேஷ். அந்த வரிசையில் இன்று சிரியா. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் அது எங்கேயும் நடக்கும்.


சம்ப
டிச 08, 2024 16:30

அங்கேயுமா


சமீபத்திய செய்தி