உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பராமரிக்க முடியாத பாண்டா சீனாவிடம் திருப்பி தர முடிவு

பராமரிக்க முடியாத பாண்டா சீனாவிடம் திருப்பி தர முடிவு

ஹெல்சிங்கி, ஐரோப்பிய நாடான பின்லாந்து, 2017ல் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதையொட்டி, இரண்டு ராட்சத பாண்டா கரடிகளை சீனா அந்நாட்டிற்கு வழங்கியது.வரும் 2033 வரை பராமரிப்பதற்காக கடனாக வழங்கப்பட்ட அவை இரண்டும், ஹெல்சின்கியில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தன.ஆண் பாண்டாவுக்கு பைரி என்றும், பெண் பாண்டாவுக்கு லுாமி என்றும் பெயர் சூட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இதற்காக இந்திய மதிப்பில் 74 கோடி ரூபாய்க்கு தனியிடம் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சீனாவிற்கான கட்டணம், இரண்டு பாண்டாக்களையும் பராமரிக்கும் செலவு என ஆண்டுதோறும் அஹ்தாரி உயிரியல் பூங்காவிற்கு 14 கோடி ரூபாய் செலவானது.இந்நிலையில், பாண்டாக்களை பராமரிக்க முடியாததால், அவற்றை சீனாவுக்கு திருப்பி அளிக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா பரவலுக்குப் பின் உயிரியல் பூங்காவிற்கு வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.'ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகவும் பார்வையாளர் எண்ணிக்கை சரிந்து விட்டது. பணவீக்கம், வட்டி விகிதங்கள் அதிகரிப்பு காரணமாக உட்பட பல்வேறு சவால்களை உயிரியல் பூங்கா சந்தித்து வருகிறது. எனவே, இரண்டு பாண்டாக்களையும் பராமரிக்க முடியாமல் சீனாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை