உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சொந்த மண்ணில் தோல்வி: கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய நெய்மர்

சொந்த மண்ணில் தோல்வி: கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய நெய்மர்

பிரேசிலியா: உள்ளூர் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் சாண்டோஸ் அணி படு தோல்வி அடைந்ததை அடுத்து நெய்மர் ஜூனியர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.பிரேசில் உள்ளூர் கால்பந்து தொடரில் சாண்டோஸ் அணிக்காக பிரபல சர்வதேச வீரர் நெய்மர் விளையாடி வருகிறார். இந்த தொடரில் சாண்டோஸ் அணி ,19 ஆட்டங்களில் 10 தோல்விகளை சந்தித்து பட்டியலில் 15 வது இடத்தில் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6yzd1hah&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் சொந்த மண்ணில் நேற்று நடைபெற்ற போட்டியில் வாஸ்கோடகாமா அணியை, சாண்டோஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியின் இறுதியில் சாண்டோஸ் அணி 0-6 என்ற கோல் கணக்கில் வாஸ்கோ அணியிடம் தோல்வி அடைந்தது.தோல்விக்கு பிறகு மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கண்ணீர் விட்டு அழுதார். அவரை சகவீரர்களும், பயிற்சியாளரும் சமாதானம் செய்தபோதும் அழுதபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த சூழலில் அணியின் தோல்விக்காக சாண்டோஸ் அணியின் பயிற்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயிற்சியாளர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நெய்மர், சரியாக செயல்படாத சாண்டோஸ் அணியின் வீரர்களை குற்றஞ்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !