உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முடியாது... முடியாது... முதல்ல இருந்து நடத்துங்க; பிரிட்டனில் மறுதேர்தலுக்கு வலுக்கும் கோரிக்கை!

முடியாது... முடியாது... முதல்ல இருந்து நடத்துங்க; பிரிட்டனில் மறுதேர்தலுக்கு வலுக்கும் கோரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டனில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் 6 மணிநேரத்தில் 2 லட்சம் பேர் கையெழுத்து போட்டிருப்பது ஆளும் தொழிலாளர் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்நாட்டின் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவரது ஆட்சி தொடங்கிய 4 மாதங்களிலேயே அவருக்கு எதிரான அலை பிரிட்டனில் வீசத் தொடங்கியுள்ளது. கட்சியின் கொள்கை மற்றும் ஆளும் கட்சியின் செயல்பாடுகளினால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், மறுதேர்தல் நடத்தக்கோரி, கையெழுத்து இயக்கம் நள்ளிரவு தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட 6 மணிநேரத்திலேயே 2 லட்சம் பேர் கையெத்திட்டுள்ளனர். பொதுவாக, ஒரு சட்டம் அல்லது கொள்கையின் மீது இது போன்ற கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டிருந்தால், அதற்கு அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேபோல, ஒரு லட்சம் பேர் கையெழுத்து போட்டால், பார்லிமென்ட்டில் விவாதமே நடத்த வேண்டும். இப்படிபட்ட சூழலில், அரசுக்கு எதிராக 2 லட்சம் பேர் கையெழுத்திட்டிருப்பது, ஆளும் தொழிலாளர் கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பான செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், 'வாவ்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
நவ 25, 2024 12:28

அப்படி என்றால் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் அவர்களுக்கு மீண்டும் பிரதமர் பதவி வாய்ப்பு கிடைக்குமா?


vikram
நவ 25, 2024 20:43

கேவலமா இருக்கும்


duruvasar
நவ 25, 2024 11:44

நாங்கள் 2 நாட்களில் கோடி கையெழுத்து வாங்கியிருப்பதை லண்டன் மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட மாடலை எவனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.


Anonymous
நவ 25, 2024 09:49

ஒரு காலத்தில் உலகில் பிரிட்டன் ஆளாத நாடே இல்லைன்னு இருந்தது, இன்னைக்கு அவங்க நிலமை, சொந்த நாட்டையே தக்க வச்சுக்க போராட வேண்டிய பரிதாபமான நிலைமை


M Ramachandran
நவ 25, 2024 09:20

நல்ல செய்தி.


கிஜன்
நவ 25, 2024 09:10

பேசாம .... மகளிருக்கு இலவச பஸ் பயணம் .... மாதம் ஆயிரம் பவுண்டு ...திட்டம் அறிவிச்சு பாருங்க ....


Rpalnivelu
நவ 25, 2024 09:02

பிரிட்டனுக்கு ஒழுங்கான தலைமை வேண்டும். இல்லையெனில் லண்டன் கூடிய விரைவிலேயே இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமாகுவது உறுதி.


Barakat Ali
நவ 25, 2024 08:36

நாங்களும் இப்படித்தான் கையெழுத்து வேட்டை நடத்தி நீட் ஐ ஒழிச்சோம் ..... அதுதான் நீட் ஒழிப்பு ரகசியம் ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை