உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சர்க்கரை நோயால் இளைஞர்கள் பாதிப்பு இருமடங்கு அதிகரிப்பு; ஆய்வில் அதிர்ச்சி

சர்க்கரை நோயால் இளைஞர்கள் பாதிப்பு இருமடங்கு அதிகரிப்பு; ஆய்வில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை, கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகளவில் இந்த நோயின் தாக்கம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல வார இதழான தி லான்சேட் ஜார்னல் ( The Lancet journal), கடந்த 30 ஆண்டுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகையில் 80 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 1990ம் ஆண்டுகளில் 20 கோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருப்பதும், வளர்ந்த நாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இன்சுலின் குறைபாட்டினால் இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதும், இன்சுலின் உணர்திறன் இழப்பால், நடுத்தர மற்றும் வயதானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. வளர்ந்த மற்றும் ஏழை நாடுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் தென்படுகிறது. இந்தியாவிலும் இந்த பாதிப்பு பெருமளவில் உள்ளது. 44 கோடி இளைஞர்கள் சர்க்கரை நோய் பாதிப்பிற்கு முறையான சிகிச்சை பெறுவதில்லை. அண்டை நாடான பாகிஸ்தானில் 3ல் ஒரு பங்கு பெண்கள் சர்க்கரை நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இது 1990ம் ஆண்டு காலகட்டத்தில் 10ல் ஒரு பங்கினரே பாதிக்கப்பட்டிருந்தனர். சவுதி அரேபியாவில் மட்டும் 5 முதல் 10 சதவீத இளைஞர்கள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 1990ம் ஆண்டுகளில் 7 சதவீதமாக இருந்ததாகவும், 2022ம் ஆண்டு நிலவரப்படி, அது 14 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

செல்வா
நவ 14, 2024 13:37

ஆக வேக்ஸின் வேலையே காட்டுகின்றது


KRISHNAN R
நவ 14, 2024 13:31

மருந்து கம்பெனிகள் வேலை


Barakat Ali
நவ 14, 2024 11:48

அனைத்தும் மேலோனாகிய அவனுடைய விருப்பப்படியே நடக்கிறது .........


veeramani
நவ 14, 2024 09:51

ஒரு மய்ய அரசின் விஞ்ஞானியின் கருத்து டயபெட்டிஸ் ... இந்த தொற்றுக்கு சக்கரையின் அளவுகள் லிமிட் இதை உருவாக்கியது எவர்?? எனக்கு தெரிந்த மட்டில் 1900 கலீல் இங்கிலாந்து நாட்டில் முதலில் லிமிட்டை இருந்தது. ஒரே ஒரு கேள்வி. பாரத நாடு உலகில் பூமத்திய ரேகை நாடு என அறியப்படுகிறது. இங்கு வெப்பசூழ்நிலை அதிக காலத்திற்கு இருக்கிறது. கன்யாகுமரி முதல் கில்ஜித் பல் டிஸ்தான் வரை பரவியிருக்கும் பாரத நாட்டில் மக்கள் பல சூழ்நிலைகளில் வசிக்கின்றனர். எனவே 100 வருடங்களுக்கு முன்னர் பிக்ஸ் செய்த ஒரு மடத்தனமான சக்கரையின் அளவுகளை இந்திய டாக்டர்கள் கவனிக்கலாகாது . இந்திய தட்பவெட்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒரு ஸ்டாண்டர்ட் ஒருவாக்கப்படவேண்டும் நீரிழிவு நோய் அல்ல. இது கார்பொரேட் பிசினஸ்


p karuppaiah
நவ 14, 2024 10:26

மிகச்சரியான கருத்து, உங்களை நான் பாராட்டுகின்றேன்


Barakat Ali
நவ 14, 2024 11:49

மன்னிக்கவும் ....... உங்களைப்போல கருத்துள்ளவர்கள் தவறாமல் ஆங்கில மருத்துவம் பார்த்துக் கொள்கிறார்கள் ....


ஆரூர் ரங்
நவ 14, 2024 12:50

மனிதன் உடலுழைக்கும் நேரம் குறையக் குறைய சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகரித்து விட்டது. சர்க்கரையளவு 150 இருக்கும் போதே உடல் பாதிப்புகள் சைலண்ட்டாக வந்து விடுகின்றன. எனவே ஆராய்ச்சி மருத்துவர்கள் அளவை மாற்றியது நியாயமே.


Palanisamy Sekar
நவ 14, 2024 08:55

உலகம் எவ்வளவு ஜன தொகையைத்தான் தாங்கும்? வாயை கட்டுப்படுத்தாதவரை இதுபோன்ற நோய்க்கு ஆளாவதை தடுக்க முடியாது. ரீலிஸ் போடுவோர் பெண்களில் அடேங்கப்பா ஒரு வாரத்துக்கான சாப்பாட்டை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை காணும்போது... ஓஹோ இவர்களுக்கு நாளையே உலகம் அழியப்போகுதுன்னு யாரோ சொல்லியிருக்காங்க போல என்றுதான் தோன்றியது. தேடி தேடி அலைந்து ருசிக்கேட்கும் நாக்குக்கு சொந்தக்காரர்கள் சர்க்கரை நோயை தாங்களே வரவேற்கின்றார்கள். ஒருமுறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னார். உலகத்திலேயே அதிகம் சாப்பிடுவோர் இந்தியர்கள் தான் என்று. அந்த அளவுக்கு உணவு வெறியர்கள் நம்ம நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள்தான் இப்படி நோய்க்கு உள்ளாகி உள்ளனர்.


கூறமுதலீ
நவ 14, 2024 08:42

வீட்ல இருக்கிறவங்க ஒழுங்கா நல்ல வாய்க்கு ருசியா சாப்பிடற மாதிரி சமைச்சு போட்டா ஏன் வெளியில் போய் சாப்பிடுறாங்க.


skv srinivasankrishnaveni
நவ 14, 2024 08:06

என்ன பண்றது அநேகமா எல்லா மாணவமணிகளும் டாஸ்மாக் தண்ணீர் குடிக்குதுங்கோ அசிங்கமா பீல்பன்றதுமே இல்லீங்க நடத்தையும் கேவலம் போறதுக்கு கஞ்சா கஸ்மாலம் வேற நல்ல ஹேப்பிட் சுத்தமாயில்லீங்க செய்யாத அநியாயம் இல்லே, சுகர் மட்டுமா வரும் இல்லீங்க எல்லாவியாதியும் varum


Barakat Ali
நவ 14, 2024 11:50

சபிக்காதீங்கோ ..... நடக்கறது நடந்தே தீரும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை