உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு

பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.வாஷிங்டன்னில், இன்று நடக்கும் 250ம் ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை அமெரிக்கா சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், டிரம்ப் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்கும் வகையில் அசிம் முனீர் இந்த வாரம் அமெரிக்கா செல்ல இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம் வைத்தது . இது தொடர்பாக அக்கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், தூதரக ரீதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு, அசிம் முனீர் தான் அத்துமீறும் வகையில்பேசினார். அமெரிக்காவின் நோக்கம் என்ன என கேட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜ., '' பொய்ச்செய்திகளை பரப்புவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்'' எனக்கூறியிருந்தது. இதனை வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்த செய்தி தவறானது. எந்த வெளிநாட்டு ராணுவ தளபதிகளையும் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மு செந்தமிழன்
ஜூன் 16, 2025 08:58

ஏய் என்ன டிரம்ப்ஜி ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க தான் பக்கிஸ்தான் முனிசாமியை கூப்பிட்டாத சொன்னாக இப்ப இல்லன்னு சொல்றீங்க உங்க பேச்சை ஓடுற தண்ணியில தான் எழுதனும்


sankaranarayanan
ஜூன் 15, 2025 21:23

இந்தியாவின் கோயபெல்ஸ் காங்கிரசு கட்சியும்,அதில் உள்ள முக்கிய தலைவர்களும் தான்...


உண்மை கசக்கும்
ஜூன் 15, 2025 20:16

எதனால் அடிப்பது...


SRIRAM
ஜூன் 15, 2025 19:26

அவங்களும் சன் டிவி பார்க்கிறாங்களோ என்னவோ... செய்யாததெல்லாம் செய்தேன் என்று சொல்வது, உன்னஸ்கோ பட்டம், முத்தமிழ், கல்வி தந்தை, தலித் காப்பாளர், என்பது போன்ற பல.....


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 19:15

FBI இயக்குனர் இந்துக்களுக்கு எதிரான கேடியை அமெரிக்காவுக்குள் விடக்கூடாது என்று சொல்லியிருப்பார்...


raja
ஜூன் 15, 2025 17:52

கான் கிராஸ் மற்றும் அதன் கூட்டாளி திருட்டு திமுக இரண்டும் பொய் சொல்வதில் கில்லாடிகள்...


RAJ
ஜூன் 15, 2025 16:40

எங்கே ,ஜெயராம் ரமேஷ் காணோம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை