உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வர்த்தகப் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன்; சிறந்த நண்பர் என வர்ணித்த அதிபர் டிரம்ப்!

வர்த்தகப் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன்; சிறந்த நண்பர் என வர்ணித்த அதிபர் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, மோடியை 'ஒரு சிறந்த மனிதர்' மற்றும் 'ஒரு சிறந்த நண்பர்' என்று வர்ணித்தார். அவர், வர்த்தகப் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன் என தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குகளை ஏற்றி, தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய-அமெரிக்க உறுப்பினர்கள் மற்றும் பிற சமூக பிரமுகர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். பின்னர் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது: இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்று உங்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம். அவர் ஒரு சிறந்த மனிதர்.

சிறந்த நண்பர்

அவர் பல ஆண்டுகளாக எனக்கு ஒரு சிறந்த நண்பராகிவிட்டார். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். குறிப்பாக, அவருடன் நான் தற்போதைய வர்த்தக பிரச்னைகள் குறித்து விவாதித்தேன். எதிர்காலத்தில் இந்தியா கணிசமான அளவு ரஷ்ய எண்ணெயை வாங்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

எதற்கெடுத்தாலும் வரியா?

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக, மோடி உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அவர்கள் தொடர்ந்து வணிகம் செய்ய விரும்பினால் பெரிய அளவிலான வரிகளைச் செலுத்துவார்கள், அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை', என டிரம்ப் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
அக் 22, 2025 15:22

கலாம் சொன்னதை பின்பற்றலாம். ஆனால் கனவிலேயே எல்லோரையும் பார்த்துப் பேசுவது டூ மச்.


Harindra Prasad R
அக் 22, 2025 15:20

ட்ரம்க்கு ஆயுதங்கள் இந்தியாவில் விற்க முடியவில்லை ... அத்துடன் இவர் சொல்லவதெல்லாம் இந்தியா தலையாட்டும் என்று எதிர்பார்த்தார் அதுவும் நடக்கவில்லை . இது காங்கிரஸ் அல்ல.... நாற்று பற்றுடைய பிஜேபி அதுவும் விவேகானந்த மோடிஜி ....


M. PALANIAPPAN, KERALA
அக் 22, 2025 12:05

நவீன கோமாளி டிரம்ப்


SP
அக் 22, 2025 09:23

இது என்ன மாதிரி வியாதி என்று தெரியவில்லையே?


Raja k
அக் 22, 2025 09:00

உண்மையில் நீங்க ரெண்டுபேரும் ஒரே ஆளுதான், மக்களின்மேல் வரிபோடுவதில்


duruvasar
அக் 22, 2025 08:55

பொய் பேசுவதை ஒரு டிப்ளமசியாக வைத்திருக்கும் ஒரு நாட்டின் அதிபர் என்றால் இவரே


Priyan Vadanad
அக் 22, 2025 20:50

இது சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்குமே பொருந்தும் போல பதிவிட்டிருக்கிறீர்கள்.


Ravi Chandran .K , Pudukkottai
அக் 22, 2025 07:57

ஒரு காலத்தில் அது ஒரு சாதாரண முறையிலான பேச்சுவார்த்தையாக அமெரிக்க அதிபர் பிறநாட்டு தலைவர்களுடன் ஒரு சில நிமிடங்கள் பேசி இருப்பார்! ஆனால் வெள்ளை மாளிகை அந்த செய்தியை வெளியிட்டு இருக்காது! அமெரிக்க அதிபருடன் இன்று பேசினேன் என பெருமையாக பேசிய மற்ற நாட்டு தலைவர்கள் அந்த செய்தியை வெளியிடுவார்கள். ஆனால் இன்று அமெரிக்க அதிபர் பேசியதாக வலிய தானாகவே கூறுகிறார்! என்னுடன் இன்று அவர் பேசவே இல்லை இந்த செய்தி உண்மை இல்லை என பிற நாட்டு தலைவர்கள் மறுக்கும் சூழ்நிலை. அமெரிக்க அதிபர் எனும் கெத்தான தலைமைப் பதவியை எந்த அளவு கேலிக் கூத்தாக டிரம்ப் மாற்றி வைத்துள்ளார் பாருங்கள்!


S.V.Srinivasan
அக் 22, 2025 07:46

வர்த்தக பிரச்சனை உங்களுக்குத்தான் ட்ரும்பு. எங்களுக்கில்லை. நீங்க மாறனும். உள்நாட்டிலேயே உங்களுக்கு எதிரா போராட்டம் வலுக்குதுன்னு செய்தி வருது.


Appan
அக் 22, 2025 07:23

இந்தியாவின் பிஎம் மோடியை, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் உடன் பேச்சு வார்த்தை செய்ய அழைத்து உள்ளார். அதாவது இந்தியாவின் பிஎம் பாகிஸ்தானின் ராணுவ தளபதிக்கு சமம். இது தான் டிரம்ப்பின் நண்பனின் அடையாளம். காலையில் எழுந்து ஒரு புதிய அறிவிப்பை விடுவார். இதை எல்லாம் உண்மையாக எடுத்து யாரவது செயல் பட முடியுமா டிரம்பை தேர்தெடுத்த அமெரிக்கர்களின் எண்ணங்கள் எப்படி உள்ளது என்று பாருங்கள்.. இப்படி உளறிக்கொண்டு இருக்கும் டிரம்பை இன்னும் போற்றுகிறார்கள். இப்படி ஒரு நாடு இருக்க முடியுமா? உலகில் அமெரிக்க வெறும் 4% மக்கள் தொகை உள்ள நாடு. இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதை குறைத்து மற்ற நாடுகளிட வியாபாரம் செய்ய வேண்டும். அமெரிக்காவின் பெரிய ஏற்றுமதி ராணுவ தளவாடங்கள். இந்திய இந்த மார்கெட்டுக்கு தளவாடங்கள் கொடுக்கணும். இந்திய ராணுவ தளவாடங்கள் பல டிரில்யங்களுக்கு விற்கணும். இந்திய சாத்வீகம், உண்மை ஆறாம் ..ஏன்று பேசி மக்களை வறுமையில் வைக்காமல் உலகம் போகும் போக்கில் சென்றி வலிமை மிக்க நாடாக மாறனும். இந்தியாவிடம் அந்த சிந்தனை திறன் உ ள்ளது. இதை நல்ல உபகித்து இந்திய வலிமை பெற்ற நாடாக பாக்கணும்.


Ramesh Sargam
அக் 22, 2025 06:43

ஒரு பக்கம் சிறந்த நண்பர் என்று இந்திய பிரதமரை புகழ்வது. மறுபக்கம் இந்தியா மீதான வரியை ஏற்றிக்கொண்டு போவது. இது என்ன விளையாட்டு என்றே தெரியவில்லை. பிரதமர் மோடி அவர்கள், டிரம்ப்பிடம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவர் வைக்கும் ஐஸ் கட்டியில் உறைந்துபோய்விடக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை