உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாத்திரம் கழுவும்; வீட்டை பெருக்கும்... எடுபிடி வேலைக்கு ரோபோ வந்தாச்சு!

பாத்திரம் கழுவும்; வீட்டை பெருக்கும்... எடுபிடி வேலைக்கு ரோபோ வந்தாச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: வீட்டில் செய்யக்கூடிய அனைத்து எடுபிடி வேலைகளையும், பார்வையாளர்கள் முன்னிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ஆப்டிமஸ் ரோபோ செய்து காட்டி அசத்தியது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த வியாழன் அன்று, 'வீ ரோபாட் ' என்ற நிகழ்ச்சியை டெஸ்லா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களை, வரவேற்ற ரோபோக்கள், நடனம் ஆடி வரவேற்றன. உணவு, டிரிங்க்ஸ் வழங்குவது என எல்லோருடனும் பழகி, பேசி செல்பி எடுத்து அசத்தியது.ரோபோக்களுக்கு ஆப்டிமஸ் ரோபோ என டெஸ்லா நிறுவனம் பெயரிட்டுள்ளது.ஆப்டிமஸ் ரோபோக்களை அறிமுகம்செய்து, டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறுகையில்,'இந்த ஆப்டிமஸ் ரோபோக்கள், உங்களுக்கு தேவையான அடிப்படை செயல்கள், சேவைகளை வழங்கும்.உங்களுக்கு ஓர் ஆசிரியராக, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது, வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது என உங்கள் நண்பன் போல சேவைகளை வழங்கும். வீட்டில் உள்ள அலமாரியில், அந்தந்த பொருட்களை அடுக்குவது, சமையலறை பாத்திரங்களை கழுவுவது, சுத்தம் செய்வது என நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ, அதை அந்த ரோபோக்கள் செய்து அசத்திவிடும்.உங்களுடன் நன்றாக பேசி, நடந்து வரும். மதுபான கூடாரங்களில், பானங்களை வழங்கி சேவை செய்யும்.இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் விலை, ரூ.17 லட்சத்திலிருந்து 26 லட்ச ரூபாய் வரை இருக்கும்.இவ்வாறு எலான் மஸ்க் கூறினார்.ரோபோக்கள் குறித்து சிலர் கூறுகையில், இந்நிகழ்ச்சி, உண்மையிலேயே மறக்கமுடியாத வரலாற்று நிகழ்வாகும்.ரிமோட் மூலமாக இயங்கி பானங்களை வழங்கினாலும், இன்னும் எங்கள் மனதில் அழுத்தமாக பதிந்து ஆச்சர்யபடுத்தி விட்டது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rpalnivelu
அக் 12, 2024 23:37

டூப்ளிகேட் காந்தி பெயரை வைத்துக் நாட்டை கொண்டு ஏமாற்ற முடியுமா? நாட்டை சுரண்டி முப்பதாயிரம் கோடிகளை சுருட்ட தெரியுமா? Atleast விதோட்டில் வர முடியுமா? எதுவுமே தெரியாத ஆப்டிமஸ் என்னவென்று சொல்வது? எங்க நாட்டுக்கு நீ தேவையில்லை


Narayanan Sa
அக் 12, 2024 21:14

நீதி மன்றாங்களில் நீதிபதி வேலைக்கி இந்த ரோபோவை அமர்த்தினால் ஒரே நிமிடத்தில் தீர்ப்பு கொடுத்து விடும். நம்ம நீதிபதி போல பக்கம் பக்கமா படித்து தீர்ப்பு வழங்க எவ்வளவு காலம் பிடிக்கிறது.


theruvasagan
அக் 12, 2024 20:09

நம்ம ஊர்ல RTO பத்திரப் பதிவு அலுவலகம் ரெவின்யூ ஆபிஸ் கார்பொரேஷன் அலுவலகம் இங்கெல்லாம் ரோபோக்களை வேலைக்கு அமர்த்தினால் லஞ்ச லாவண்யம் பாதிக்கு பாதியாக குறையும் வாயப்புள்ளது. பிற்பாடு காவல் துறை நீதித்துறை. முக்கியமாக வழக்கறிஞர் தொழிலில் ரோபோக்கள் மிக மிக அவசியம்.


sundarsvpr
அக் 12, 2024 19:01

நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும் நீண்ட நாள் நிம்மதியற்று வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளன. ஆரோக்கியத்துடன் வாழபவர்கள் அவர்களின் உடலின் எல்லா உறுப்புகளும் பணி செய்கின்றன. உடல் உறுப்புக்கள் வேலை செய்யாமல் நீண்டநாட்கள் வாழபவர்கள் மாத்திரைகளால் மன நிம்மதி இழந்து வாழ்கிறார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்பது இயற்கையின் நியதி .


Narayanan Sa
அக் 12, 2024 18:44

பிரதமர் முதலமைச்சர் மற்றும் எல்லா மந்திரி பதவி மேலும் கலெக்டர் பதவியையும் இந்த ரோபோக்களுக்கு கொடுத்து விட்டால் எங்கும் லஞ்சம் இருக்காது. குடிப்பவர்களை கண்டால் அடி என்ற கமன்ட் கொடுத்து விட்டால் நாடு ஒழுங்காக நடக்கும்.


என்றும் இந்தியன்
அக் 12, 2024 17:21

வேலைக்காரி சம்பளம் ஒரு மாதத்திற்கு 1 மணிநேரம் தினம் சம்பளம் ரூ 2000 என்றால் வருடத்திற்கு ரூ 24,000????இந்த ரோபோட் ரூ 17 லட்சம் - 26 லட்சம் வரை - இந்த ரோபோவின் ஆயுட்காலம் 10 வருடம் என்று வைத்துக்கொண்டால் கூட இந்தியாவில் சாதாரண குடும்பத்திற்கு வெறும் விளம்பரத்திற்கு இது ஓகே ஓட்டலில் வேண்டுமானால் இதை வைத்து கொள்ளலாம்


M Ramachandran
அக் 12, 2024 16:54

கட்டளையில் ஏதாவது ஏடா குடமாக யேற்பட்டால் தூங்குபவன் பிறகு எழுந்திருக்க மாட்டான். அவனைய சுருட்டி வாஷிங் மெசிண்ணில் போட்டு துவைத்து எடுத்து விடும்


Sundar
அக் 12, 2024 16:48

AI மூளையுடன் இருந்தால் பின்னொரு நாளில் ஆளை அடிக்கும் வேலையும் செய்யலாம்...ம்ம்ம்...


Lion Drsekar
அக் 12, 2024 16:22

சம்பள உயர்வு, போனஸ், தொழிற்சங்கம்,, திருடு , ஏமாற்றுதல் , நேர்மையானவர்களை அழித்து தீய சக்திகளுக்கு இடமளித்தல் என்று எல்லாமே இருக்காது, தினமலர் மறந்த செய்தி, சீனாக்காரர்கள் ஆண்களுக்காக இன்றைய சூழிநிலைகைக் கண்டு சிலிக்கான் பெண்கள் யார் யார் எந்த உருக்கம் , முக அமைப்பில் கேட்க்கிறார்களோ அவரவர்களுக்கேற்ப தாயாரித்துக்கொண்டுக்க ஆரம்பித்துவிட்டார்கள், காரணம், முன்பு விபவராம் தெரியாத காலங்களில் பெண்பார்க்கும்போது 100 வீடுகளுக்குச் என்று பஜ்ஜி சொஜ்ஜி தின்றுவிட்டு பாட்டு பாடச்சொல்வதும் நாட்டியமாட சொல்வதுமாக , சீதனத்தையும் பெற்றுவந்த தலைமுறை மாறி இன்று, பெண்கள் வருங்கால மாப்பிளைகளை மற்றும் அவரது குடும்பத்தார்களையும் கேட்ட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சொல்லிக்காமல் பெண்வீட்டில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடிவரும் நிலை உருவாகிவிட்டது, ஆகவே இதுபோன்ற ஆண்களுக்கு வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், முன்பு இதன் விலை 5 லட்சமாக இருந்தது, தற்போது ஆசிய நாட்டில் அதிக அளவில் விற்க அவர்கள் விலையை 2 லட்சத்துக்கு விற்க ஆரம்பித்துவிட்டார்கள், விவாகரத்து, அது இது என்ற எந்த ரூ பிரச்னையும் இல்லை, மேலும் அவரவர தாய்மொழிக்கு ஏற்ப பேசும் ஆற்றலும் உள்ளதை நாம் யு டியூபில் காணலாம், இதே போன்று அரசியல் கட்சிக்கும் , அரசு அதிகாரிகளுக்கு வந்தால் லஞ்சமே இருக்காது . வஞ்சமும் இருக்காது, அப்போதாவது மக்கள் சுதந்திரம் என்றால் என்ன என்று வாழ்நாளில் ஒருளாலாவது பார்க்க வாய்ப்பு கிடைக்குமே, வந்தே மாதரம்


முக்கிய வீடியோ