|  ADDED : ஜூலை 07, 2025 09:51 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
மாஸ்கோ: ரஷ்யாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து அமைச்சர், பதவி இழந்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரஷ்யாவில் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தவர் ரோமன் ஸ்ட்ரோவாய்ட். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியின் கவர்னராகவும் இருந்தார்.போக்குவரத்து அமைச்சராக அவரது செயல்பாடுகள் சரியில்லை என்று கருதிய ரஷ்ய அதிபர் புடின், இன்று காலை அவரை பதவி நீக்கம் செய்தார்.ரஷ்யாவின் வான்வெளி போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து துறையில் சில வாரங்களாக பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்ய விமான நிலையங்களில் 300 விமானங்கள் அவசரமாக தரை இறக்கப்பட்டன. இது மட்டுமின்றி, டேங்கர் கப்பலில் வெடிவிபத்து சம்பவமும் நேரிட்டது.இந்த விவகாரங்களை, போக்குவரத்து அமைச்சர் சரியாக கையாளவில்லை என்று கருதியதாக, அவர் இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் அதற்கான காரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ரோமன் ஸ்ட்ரோவாய்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாஸ்கோ புறநகர்ப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.