உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பால் பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு

முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பால் பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் ஜூலை 04-ம் தேதி நடைபெறுவதையொட்டி அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாக இன்று(30.05.2024) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு முன்கூட்டியே ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என கடந்த 02-ம் தேதி பிரதமர் ரிஷி சுனாக் அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=33b7ba21&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பார்லிமென்ட் இன்று கலைக்கப்பட்டது. 650 எம்.பி.க்கள் பதவி காலியானதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ