உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கலிபோர்னியாவிலும் தீபாவளிக்கு விடுமுறை

கலிபோர்னியாவிலும் தீபாவளிக்கு விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கலிபோர்னியா : அமெரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஒரு நற்செய்தியாக கலிபோர்னியா மாகாணத்தில், தீபாவளி பண்டிகை, அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஹிந்துக்கள் பண்டிகையான தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை இருந்து வந்தது. கடந்த மாதம் கலிபோர்னியாவின் சட்டசபையின் இரு சபைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடர்ந்து தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவுக்கு கவர்னர் கவின் நியூசம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதன்படி, தீபாவளியை ஒட்டி, அரசு பொது கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும்.இதற்கு முன்பு 2024ல் பென்சில்வேனியாவிலும், இந்தாண்டின் முற்பகுதியில் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராஜ்
அக் 08, 2025 23:35

இங்கே விடியல் இன்னும் பத்து வருடம் ஆண்டால் இந்து பண்டிகைகள் விடுமுறையை நீக்கினாலும் நீக்குவார்


Rajah
அக் 08, 2025 22:41

தீபாவளி கொண்டாடுவதே சமூகநீதிக்கு எதிரானது.இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும் சமூகநீதிக்கு எதிரான செயலாகும். கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் மட்டுமே சமூகநீதி பேசுவதற்கு தகுதியானவர்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 08, 2025 21:12

அமெரிக்கா முழுவதும் தீபாவளி பொது விடுமுறை அல்ல இருப்பினும், பென்சில்வேனியா, கலிபோர்னியா மற்றும் கனெக்டிகட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநில விடுமுறையாகும், மேலும் நியூயார்க், டெக்சாஸ் மற்றும் நியூ ஜெர்சி போன்ற பிற மாநிலங்களும் இதை அங்கீகரிக்கின்றன. இந்த அங்கீகாரம் கலாச்சார முக்கியத்துவத்தை அளித்து, அதிகாரப்பூர்வ அனுசரிப்புகளை அனுமதிக்கிறது


பாபு
அக் 08, 2025 21:05

அது அமெரிக்கா. இங்குதான் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்தாத அரசியல் செய்யும் மு தலைவர் இருக்காரே. கண்டா எடுத்து சொல்லுங்க.


Balasubramanian
அக் 08, 2025 20:21

டிரம்ப் மனது வைத்தால் அனைத்து மாநிலங்களிலும் தீபாவளி விடுமுறை மற்றும் கொண்டாட்டங்கள் அறிவிக்க முடியும்! நமது மாநில முதல்வர் அவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம்!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை