உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விசா காலம் முடிந்த பிறகும் தங்கக்கூடாது: புகலிடக் கோரிக்கைகள் அதிகரித்த நிலையில் பிரிட்டன் அரசு செக்

விசா காலம் முடிந்த பிறகும் தங்கக்கூடாது: புகலிடக் கோரிக்கைகள் அதிகரித்த நிலையில் பிரிட்டன் அரசு செக்

லண்டன்: விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேற்றுவோம் என்று பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.கல்வி விசா வாங்கிக் கொண்டு பிரிட்டன் வந்த சர்வதேச மாணவர்கள், விசா முடியும் தருவாயில் புகலிடம் கூறுவது வாடிக்கை ஆகிவிட்டது. இவ்வாறு ஜூன் மாதம் வரை 14,800 புகலிட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 5,700 விண்ணப்பங்கள் பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் சார்பில் தரப்பட்டுள்ளன.அடுத்தடுத்த இடங்களில் இந்தியா, வங்கதேசம் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த மாணவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். இவ்வாறு புகலிடம் கோருவது குறித்து பிரிட்டன் அரசாங்கம் எச்சரிக்கத் தொடங்கியுள்ளது. அரசாங்கம் ஆயிரக் கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு நேரடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்புகிறது.இது குறித்து, உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் 15,000 மாணவர்கள் தங்கள் விசா காலாவதியாகும் போது புகலிடம் கோருகின்றனர். குழப்பத்தைச் சமாளிக்க நாங்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தங்கள் விசா முடிவடையும் போது அடிக்கடி புகலிடம் கோருகிறார்கள். பின்னர் பல ஆண்டுகளாக தங்குவது, புகலிட விடுதி மற்றும் ஹோட்டல்களிலும் சிக்கல்களை ஏற்படுத்து கிறது. அதைத்தான் நாம் சரிசெய்ய வேண்டும். உங்களுக்கு இங்கிலாந்தில் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லையென்றால், நீங்கள் வெளியேற வேண்டும். நீங்கள் வெளியேறவில்லை என்றால், நாங்கள் உங்களை வெளியேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 04, 2025 03:57

ஏற்கனவே ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இருந்த பொழுது ஆசையாக சிரிய அகதிகளை வரவேற்றார்கள் - அப்பொழுதே விதை போட்டு விட்டார்கள். இன்றைய நிலவரப்படி அவர்கள்தான் யார் ஆழ்வார்கள் என்பதை தீர்மானிக்கிறார்கள். பல ஐரோப்பிய நாடுகள் இன்று நடுத்தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றன.


சமீபத்திய செய்தி