உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா பிரதமர் பதவிக்கு மோதும் அனிதா இந்திரா யார் தெரியுமா; கோவை மக்களுக்கு மேலும் ஒரு பெருமை!

கனடா பிரதமர் பதவிக்கு மோதும் அனிதா இந்திரா யார் தெரியுமா; கோவை மக்களுக்கு மேலும் ஒரு பெருமை!

ஒட்டாவா: கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவர் அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர்.சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவர் தேர்வாகும் வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார். தற்போது அடுத்தக்கட்டமாக பிரதமர் ரேசில் இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்த வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரா ஆர்யா களம் இறங்குகிறார். இன்னொருவரான அனிதா ஆனந்தும் பதவிக்கு மோதுகிறார். தமிழக தந்தை - பஞ்சாப் தாயாருக்கு பிறந்த அனிதா ஆனந்த், தாமும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். வெளிநாடுகளில் புகழ் பெற்ற, இந்திய வம்சாவளியினர், ரிஷி சுனக் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு, அடுத்த இடத்தில், 57 வயதான அனிதா இந்திரா உள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய உடனேயே, இந்திய ஊடகங்களின் கவனம் அனிதா இந்திரா பக்கம் திரும்பியது. இவரது வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், நாளிதழ்கள் உட்பட அனைத்திலும் சிறப்பு செய்திகள் வந்த வண்ணம் இருந்து கொண்டு இருக்கிறது. அனிதா இந்திராவின் தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர். அனிதாவின் தந்தைவழி தாத்தா வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அனிதாவைப் பொறுத்தவரை, அவர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பணியாற்றினார். அவர் 2019ம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, கோவிட் தொற்றுநோய் காலத்தில் கனடாவில் தடுப்பூசி கொள்முதல் உள்ளிட்டவற்றை அனிதா மேற்பார்வையிட்டார். அரசியலில் இறங்குவதற்கு முன், அனிதா, கார்ப்பரேட் நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அனிதா இந்திரா பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கனடாவில் தமிழர்கள் தமிழ் மாதத்தின் தொடக்கத்தை தைப் பொங்கலாகக் கொண்டாடுவார்கள். ஒரு கனடா நாட்டவர் என்ற முறையில், மகிழ்ச்சியான தைப் பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Amar Akbar Antony
ஜன 11, 2025 17:42

ஆருங்கோ அனிதா இந்திரா?? எங்கவூர்ல "வேற அனிதா அம்மா: எங்கவூருக்கு நல்லது செய்றாங்கங்கோ அவியல தெரியுமுங்கோ


Amar Akbar Antony
ஜன 11, 2025 17:42

ஆருங்கோ அனிதா இந்திரா?? எங்கவூர்ல "வேற அனிதா அம்மா: எங்கவூருக்கு நல்லது செய்றாங்கங்கோ அவியல தெரியுமுங்கோ


DS. Mani
ஜன 11, 2025 17:25

Tamil begining is " சித்திரை", not " தை". kindly note every one.


Narasimhan
ஜன 11, 2025 12:15

இந்திய ஊடகங்கள் ஏன் இந்திய வம்சாவளியினரை என்னவோ இந்திய பொருளாதாரம் அவர்களால் தான் செழிப்படையும் என்று கூறும் அளவுக்கு பில்ட் அப் கொடுக்கின்றனர். அவர்கள்தான் தாய்நாடு வேண்டாம் என்று சென்று விட்டார்களே. தயவு செய்து இந்தியாவிலுள்ள சாதனைபடைத்தவர்களை பற்றி எழுதுங்கள்.


Senthoora
ஜன 11, 2025 13:49

அதேநேரத்தில் அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு அரசியல் செய்யமுடியாது, அந்த நாடு மக்களை அனுசரித்து போகணும், அதேநேரத்தில் சீக்கியர்களின் ஆதிக்கமும் இருக்கு அறுதி பெரும்பாண்மை கிடைக்காவிட்டால் அவர்களிடம் தான் மடிப்பிச்சை கேட்கணும். இந்தியாவுக்கு சாதகமாக ஒன்னும் செய்யப்போவதில்லை.


Rajalakshmi J
ஜன 11, 2025 11:45

Trudeau also வேட்டி அணிந்து பொங்கல் வாழ்த்து சொல்லவில்லையா ? இதையெல்லாம் பார்த்து மயங்க கூடாது . இதே போலத்தான் கமலா ஹாரிஸ் தமிழ் நாட்டை சேர்ந்தவர் , தோசை சுட்டார் என்றெல்லாம் பல tamilians stood agape .


Krishna
ஜன 11, 2025 10:01

இவர் பிரமதர் அனால் இந்தியாவுடன் சிறந்த நட்பை விரும்புவார்.


UNMAIYA SONNEN
ஜன 11, 2025 09:36

Don't highlight "Freedom Fighter" tag. They are no more fighting for India. They seemed taken sides with others now. They no longer work for our country growth


Duruvesan
ஜன 11, 2025 09:12

ஆக சந்திரா ஆரியன் கூடாது என்ற திராவிடனின் குரல் மூலம், தீயமுக என்றும் போற்றும் இந்திராவை பிரதமர் ஆக்க போராடும் கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழக


V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 08:58

இதில் எங்களுக்கு என்ன பெருமை?? இவர் ஜெயித்தால் கோவை டு கனடா flight டிக்கெட் பாதியா குறையுமா? அல்லது கனடாவில் வாழ்கிற கோவை மக்களுக்கு பெட்ரோல் விலை பாதி ஆக்கிடுவாரா?? இந்தம்மா வை, வாய் குழறாமல் வெள்ளலூர் னு சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.


Sundar Venkat
ஜன 11, 2025 11:45

திராவிடியாஸ் எத்தனை பேர் உருப்படியாக தமிழ் பேச எழுதத் தெரிந்தவர்களாக உள்ளனர்.தீயமுக கட்சி அடிக்கும் போஸ்டரைப் பார்த்தால் தெரியும்..தமிழ் மொழி திராவிடர்களிடம் படும் பாட்டை.


Duruvesan
ஜன 11, 2025 08:48

ஆக ஒரு திராவிடன் கனடா பிரதமர் ஆவது பெரியார் போட்ட பிச்சை என விடியல் உபிசுக்கு கடிதம் விரைவில் எழுதுவார்


புதிய வீடியோ