உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உயிர் காக்கும் கடவுள் டாக்டர்கள்; ரஷ்யாவில் கடும் நிலநடுக்கத்தின் போதும் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ வைரல்!

உயிர் காக்கும் கடவுள் டாக்டர்கள்; ரஷ்யாவில் கடும் நிலநடுக்கத்தின் போதும் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ வைரல்!

மாஸ்கோ: ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் டாக்டர்கள் நோயாளிக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவானது. ஒரு மருத்துவமனையின் டாக்டர்கள், அறுவை சிகிச்சை அறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஒரு பெரிய சவாலை எதிர் கொண்டனர்.மருத்துவமனையில் இருந்து வைரலாகும் ஒரு சிசிடிவி வீடியோவில், பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டபோதும், டாக்டர்கள் குழு ஒன்று பதற்றம் அடையாமல் நோயாளிக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் ஒருவருக்கு உறுதுணையாக நான்கு நர்ஸ்கள் உடன் இருந்தனர். நில அதிர்வுகள் ஏற்பட்டதும் அவர்கள் நோயாளி படுத்திருக்கும், கட்டிலை இறுக்கிப் பிடிக்கும் காட்சி வீடியோவில் இடம் பெற்று, அனைவருக்கும் ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது.இந்த சம்பவம் ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது. டாக்டர்கள் அர்ப்பணிப்புடன் பணி செய்யும் வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உயிர் காக்கும் கடவுள் டாக்டர்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு பாராட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூலை 30, 2025 19:35

இந்தியாவில் சுனாமி வந்தாலும், மருத்துவர்கள் பிணியாளியிடம் முதலில் health insurance இருக்கா என்று கேட்டு, இருந்தால் மட்டுமே சிகிச்சையை தொடங்குவார்கள். Medical Ethics என்பதே சிறிதளவும் இல்லாதவர்கள் முக்கால்வாசி இந்திய மருத்துவர்கள்.


Padmasridharan
ஜூலை 30, 2025 19:31

டாக்டர்களே, கடவுலதான் நம்ப சொல்றாங்க நம்பள சாமி. அறுவை சிகிச்சையை நடுவில விட்டுட்டு ஒட முடியாதில்ல. இது ஒன்னும் இலவச சிகிச்சை மையம் கிடையாது. அன்னைக்கு நடக்க இருந்த மத்த அறுவை சிகிச்சைகள் எத்தனை. இது என்ன மாதிரி அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சை நடுவில் வீடியோ எடுத்து யாரு போட்டது. .


கண்ணன்,மேலூர்
ஜூலை 30, 2025 22:18

அறிவிலியே இதை யாரும் வீடியோவாக எடுக்கவில்லை அந்த அறையில் இருந்த CCTV கேமராவில் பதிவான காட்சிகள்தான் இவை. ரொம்ப அறிவாளித்தனமா கேள்வி கேட்டதா நெனப்பு...


Senthoora
ஜூலை 31, 2025 06:51

நீங்களும் செய்யமாட்டீங்க, செய்பவங்களையும் கேலி பண்ணுறீங்க, மனிதனாக இருக்க பாருங்க.


சமீபத்திய செய்தி