உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛கடவுள் இருக்காரா? இல்லையா? நம்பலாமா? கூடாதா?: அமெரிக்க பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

‛கடவுள் இருக்காரா? இல்லையா? நம்பலாமா? கூடாதா?: அமெரிக்க பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடத்தில், ‛ கடவுள் இருப்பது உண்மையா? உண்மையில் சாத்தான் உள்ளதா? ' என கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையுடன் சமூக வலைதளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியது.அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் உள்ள ஸ்கியாடூக் பப்ளிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி சில கேள்விகள் கொடுத்து விடை அளிக்கும்படி வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற கேள்விகளை, மாணவியின் தாயார் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட அது சர்ச்சையை உண்டாக்கியது.அதில் இடம்பெற்ற கேள்விகள்1. உலகம் உருவானது எப்படி?2. அதனை உருவாக்கியது யார்?3. எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா?4. ஒழுக்கம் என்றால் என்ன?5. மதம் என்றால் என்ன?6. கிறிஸ்துவம் என்றால் என்ன?7. கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன?8. கடவுள் இருப்பது உண்மையா?9. சாத்தான் இருப்பது உண்மையா?10. நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக் கொண்டனரா? என கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.இதனை மாணவியின் தாயார் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ‛‛ ஒக்லஹாமாவில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடம். உலக வரலாற்று வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள். இதனை ஆராய்ச்சி தாள் என சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் இது அற்பத்தனமானது'' என பதிவிட்டு உள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்பள்ளியையும் கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த கேள்விகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அந்தபள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Subramanian
செப் 01, 2024 09:43

இயேசு இருந்தாரா இல்லயா.அத மட்டும் சொல்லி ஏண் மதம் பரப்பரீங்க


Mr Krish Tamilnadu
ஆக 27, 2024 22:34

இரண்டு விதமான சக்தி இந்த உலகில் உள்ளது. ஒன்று நல்ல சக்தி. நாம் சொல்லும் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில், அதிக சக்தியுடன் உலா வரும். அந்த நேரத்தில் அந்த நல்ல சக்தியை நமக்கு தெரிந்த பெயரை வைத்து அழைத்து, நமது உடலில் உள்ள அகத்தில் சேமித்தால், நமக்கு நல்ல அதிர்வலைகள் கிடைத்து நமது அனைத்து செயல்களும் நன்மை தரும். அதே போல் நல்ல ஆத்மாக்களும் உலா வரும். அவைகளையும் அழைத்து நமக்கு பாதுகாப்பையும், நன்மையும் செய்ய சொல்லலாம். அதே போல் தீய சக்தி, தீய ஆத்மாவும் உலா வருகிறது. இருண்டு நேரங்களில் நம்மில் புகுந்து, அதன் உடைய வஞ்சக ஆசைகளை தீர்த்து கொள்ள முயலும். சிம்பிள் அவ்வளவு தான்.


சமூக நல விரும்பி
ஆக 27, 2024 21:44

இவை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் கேட்க பட்டு இருக்க வேண்டும். உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கடவுள் இருந்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் நம்மிடம் இருக்கிறது. பல மத நம்பிக்கை கோட்பாடுகளை நாம் பின்பற்றி வாழ்கிறோம்.அதனால் இவை எல்லா காலத்துக்கும் பொருந்தும்.


Jagan (Proud Sangi)
ஆக 27, 2024 21:28

எலக்ட்ரிக் லைட் கண்டுபிடித்தபின், இருளின் பயம் போன பின் 40% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்று ஒரு மேற்கத்திய ஆராய்ச்சி சொல்கிறது.


MUTHU
ஆக 27, 2024 20:55

இது என்னய்யா புதிதான கேள்வி போல சர்ச்சை. ஐயாயிரம் ஆண்டுகளாக இந்த கேள்வி கேட்டுக்கொன்டே தான் இருக்கின்றார்கள். விடை தான் இல்லை. நம் உபநிடததத்திலும் அஷ்டவக்ர சம்ஹிதைகளிலும் யோகா வசிஷ்டத்திலும் இதற்கு கண்டிப்பாய் விடை உண்டு.


அப்பாவி
ஆக 27, 2024 19:54

இதிலென்ன தப்பு? எந்த விடையிலும் உண்மை இருக்காது. மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதட்டுமே.


Barakat Ali
ஆக 27, 2024 19:32

அனைத்து மத மக்களுக்கும் தத்தம் மதத்தின் மீதான நம்பிக்கை குறைந்தே வருகிறது ....


Palanisamy Sekar
ஆக 27, 2024 16:53

இதற்கான விடைகள் தெரிய வேண்டும் என்றால் வடக்குப்பட்டி ராமசாமி போல்லோவெர்ஸ்டம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.


புதிய வீடியோ