உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: சொல்கிறார் டிரம்ப்!

வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: சொல்கிறார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 100% குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது'' என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.இது குறித்து, செய்தி சேனலுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த பேட்டி: அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 100% குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது. தடைகளை அகற்றுவதில் உறுதியாக இருக்கும் ஒரு நாட்டிற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். அனைவருடனும் ஒப்பந்தங்களைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தி பகையைத் தீர்த்து, சமாதானத்தை ஏற்படுத்துகிறேன்.பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்கா சீனா மீதான இறக்குமதி வரியை குறைத்து உள்ளது. நான் சீனாவுடன் அந்த ஒப்பந்தத்தைச் செய்யவில்லை என்றால், சீனா கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 17, 2025 17:31

இதை தமிழகத்தில் ஏமாளி மக்கள் தேர்ந்தெடுத்த கோமாளி மன்னாரிடம் சொன்னால் நலம்.... இங்கே வரி அதிகம்.


Ramesh Sargam
மே 17, 2025 12:45

டிரம்ப் பேச்சை நம்ப வேண்டாம்.


Narayanan Muthu
மே 17, 2025 12:17

ஊருக்கு இளைச்சவன் பில்லியார் கோயில் ஆண்டி. எல்லோருக்கும் நல்ல பிள்ளை இளிச்சவாயன்


Raja k
மே 17, 2025 11:36

மோடி உங்கள் சிறந்த நண்பர் ஆயிற்றே, நீங்கள் எது சொன்னாலும் தலையாட்டுவார் மோடி.


Nada Rajan
மே 17, 2025 10:49

நல்ல விஷயம் தான்.


குமரி குருவி
மே 17, 2025 10:37

அமெரிக்க அதிபர் பேச்சு குடிகாரன் பேச்சு போல் உள்ளதே....


ஆரூர் ரங்
மே 17, 2025 09:17

ஆயிரம் சதவீத குறைப்புன்னா நம்பியிருப்பேன் .


SUBBU,MADURAI
மே 17, 2025 09:08

அனைவருடனும் ஒப்பந்தங்களை செய்ய அமெரிக்கா விரும்பவில்லை வர்த்தகத்தை பயன்படுத்தி பகையைத் தீர்த்து சமாதானத்தை ஏற்படுத்துகிறேன். இவர்கள் பகையை எப்படி தீர்ப்பார்கள் என்பதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு: கடந்த வருடம் இந்தியாவில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் அது உலகெங்கும் தலைப்புச் செய்தியாக மாறியது நினைவிருக்கிறதா? குறிப்பாக அமெரிக்காவின் New York time, Washington Post, Arizona Republic, Daily news போன்ற பத்திரிக்கைகளில் இந்த விஷயம் பூதாகரமாகி பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டது. இந்த மாதம் ஜப்பானின் டோக்கியோ அருகே பிரேசிலியப் பெண் அமண்டா போர்ஜஸ் டா சில்வா என்பவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார் ஆனால் அது பிரேசில் தவிர பெரும்பாலான நாடுகளில் ஒரு சின்ன பெட்டிச் செய்தியாகக் கூட வரவில்லை. இதனால்தான் இந்தியா பாகிஸ்தான் போர் பற்றிய ஜப்பானிய அறிக்கை அமெரிக்காவில் வரைவு செய்யப்பட்டது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நீங்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அடிமையாக இருக்கும் வரை நீங்கள்தான் பூமியில் சிறந்த நாடு!