வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படித்தான் போன தேர்தலிலும் கூறினீர்கள் கடைசியில் பிடென் வந்துட்டாரு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். பொருளாதார ஆய்வு
இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்குகிறார்.ஓட்டுப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நடத்திய கருத்துக் கணிப்பில், துணை அதிபர் கமலா ஹாரிசை விட, டொனால்டு டிரம்ப் 2 சதவீத ஓட்டுகள் கூடுதலாக பெறுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சி.என்.பி.சி., அனைத்து -அமெரிக்கா பொருளாதார ஆய்வின்படி, டிரம்புக்கு 48 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என கூறப்பட்டுஉள்ளது. இது, கமலா ஹாரிசை விட, 3.1 சதவீதம் அதிகம். வெற்றி வாய்ப்பு
ஜனநாயக கட்சி - குடியரசு கட்சி இடையே பலத்த போட்டி நிலவும் அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா, வட கரோலினா, ஜார்ஜியா ஆகிய ஏழு மாகாணங்களில், டொனால்டு டிரம்புக்கு 48 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என, சி.என்.பி.சி., கருத்துக் கணிப்பு கூறுகிறது. டிரம்பை விட, துணை அதிபர் கமலா ஹாரிஸ், 0.3 சதவீத ஓட்டுகள் கூடுதலாக பெறுவார் என, 'ரியல் க்ளியர் பாலிடிக்ஸ்' நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு கூறுகிறது. சட்டப்பூர்வமாக்கப்பட்ட சூதாட்ட வர்த்தக நிறுவனமான, 'கால்ஷி' நடத்திய கருத்துக் கணிப்பில், டிரம்ப் வெற்றி வாய்ப்பு, 61 சதவீதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படித்தான் போன தேர்தலிலும் கூறினீர்கள் கடைசியில் பிடென் வந்துட்டாரு