உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விளம்பரத்தால் வந்த வினை; கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதித்தார் டிரம்ப்

விளம்பரத்தால் வந்த வினை; கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து வெளியான விளம்பரத்தின் எதிரொலியாக, கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்துள்ளார்.வடஅமெரிக்க நாடான கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்தார். இதையடுத்து, கனடாவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான ஒன்டாரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற வகையில், 'டிவி' விளம்பரத்தை வெளியிட்டது.மொத்தம், 60 வினாடிகள் உள்ள இந்த விளம்பரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1987ம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளில் இருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதற்கு ரொனால்டு ரீகன் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நாளை முதல் நிறுத்தப் போவதாக அம்மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இன்று (அக் 26) அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ''உண்மைகளை அவர்கள் கடுமையாக தவறாக சித்தரித்ததாலும், விரோதமான செயலாலும், கனடா மீதான வரியை அவர்கள் இப்போது செலுத்துவதை விட 10 சதவீதம் அதிகமாக உயர்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். கனடா உடன் அனைத்து வர்த்தக பேச்சு வார்த்தைகளையும் முடித்து கொண்ட சில நாட்களுக்கு பிறகு இந்த முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R K Raman
அக் 26, 2025 14:47

அமெரிக்க உச்ச நீதிமன்றம் விரைவில் இந்த கோமாளிக்கு கடிவாளம் போட வேண்டும்


KRISHNAN R
அக் 26, 2025 13:00

வரிப்புலியே வாழ்க


Kasimani Baskaran
அக் 26, 2025 09:22

அப்பாவின் பொருளாதார ஆலோசகர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கலாம்....


Field Marshal
அக் 26, 2025 09:09

புலம்பவா முடியும்


VENKATASUBRAMANIAN
அக் 26, 2025 08:19

எல்லோரும் அமெரிக்காவை புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் புரியும். அங்கே உள்ள மக்களே இவரை விரட்டி விடுவார்கள்


V K
அக் 26, 2025 08:16

அப்போ ஜாலி அமெரிக்காவில் வாழ்பவர் இன்னும் பத்து சதவீதம் அதிக வரி ஜாலி பணம் வந்து கொட்டோ கொட்டோ போகுது


duruvasar
அக் 26, 2025 08:01

சில அதிமேதாவிகள் டிரம்ப் வரி விதிச்சா அந்த நாடுகளுக்கு நஷ்டம் என நினைத்து கருத்து போடுகிறார்கள். இறக்குமதி வரி எவ்வளவு அதிகமானாலும் அதை கோடுக்க போவது அந்நாட்டு இறக்குமதி நிறுவனங்களும் அந்த நாட்டுபமக்களும். ட்ரம்பிக்கு எதிராக வாய் மூடி இருக்கவேண்டியது அந்நாட்டு மக்களே. இப்போ புரியுதா. ?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 26, 2025 07:27

வாயை கப்சிப்புன்னு மூடிக்கிட்டு, ஒண்ணும் பேசாம இருக்குறது எவ்வளவு நல்லதுன்னு தெரியுதா?


தங்கப்பாண்டி,மதுரை
அக் 26, 2025 10:55

ஏதாவது விஷேசம் உண்டா?


சமீபத்திய செய்தி