உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மூன்றாம் பாலினத்துக்கு முற்றுப்புள்ளி; டொனால்டு டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு

மூன்றாம் பாலினத்துக்கு முற்றுப்புள்ளி; டொனால்டு டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு

வாஷிங்டன் : ''அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் மூன்றாம் பாலினம் என்ற முட்டாள்தனத்தை நிறுத்தும் உத்தரவே என் முதல் கையெழுத்தாக இருக்கும்,'' என, டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக ஜன., 20ல் பதவியேற்க உள்ளார் குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். தன் புதிய அரசின் கொள்கைகள் குறித்து அவர் தெரிவித்து வருகிறார்.ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான உரிமைக்கு எதிரான கொள்கையை குடியரசு கட்சி கொண்டுள்ளது. இந்நிலையில், அரிசோனா மாகாணாத்தில் நேற்று நடந்த, கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:திருநங்கை என்ற மூன்றாம் பாலினம் என்பது முட்டாள்தனம். இந்த முட்டாள்தனத்தை நிறுத்தும் உத்தரவில், நான் அதிபராக பதவியேற்ற உடன் கையெழுத்திடுவேன். குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வது, ராணுவத்தில் இருந்து மூன்றாம் பாலினத்தவரை நீக்குவது இந்த உத்தரவில் இருக்கும். மேலும், பள்ளிகளில் இருந்தும் அவர்களை நீக்குவேன்.அதுபோல, பெண்களுக்கான விளையாட்டில், ஆண்கள் இருப்பதையும் தடுப்பேன். இனி அமெரிக்க அரசு நிர்வாகத்தின் கொள்கை, ஆண், பெண் என்ற இரு பாலினமே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான பிரச்னை, அமெரிக்க அரசியலில் நீண்ட காலமாக உள்ளது. ஓரினச் சேர்க்கையாளர் உட்பட மூன்றாம் பாலினத்தவர் உரிமைக்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சி உள்ளது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சி அதற்கு எதிர்ப்பாக உள்ளது. அதனால், அந்தந்த கட்சி கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க மாகாணங்களில் மாறி மாறி, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.மூன்றாம் பாலினம் தொடர்பான டிரம்பின் இந்த அறிவிப்பு, புதிய சர்ச்சையையும், அதிர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க் அதிபரா?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். புதிய அரசில், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அரசுசாரா துறையின் தலைவராக அவரை நியமிப்பதாக, டொனால்டு டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.பல நாட்டு தலைவர்களுடன் டொனால்டு டிரம்ப் பேசும்போது, அதில், எலான் மஸ்க்கும் கலந்து கொண்டார். இதையடுத்து, எலான் மஸ்க்தான், உண்மையான அதிபர் என, ஜனநாயகக் கட்சி விமர்சித்து வருகிறது.இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ''எலான் மஸ்க், அமெரிக்க அதிபராக முடியாது. காரணம், அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை,'' என, டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை