உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உங்க அரசியலை எங்ககிட்ட காட்டாதீங்க: பாக்., தலைவர்களுக்கு பயங்கரவாதி மிரட்டல்

உங்க அரசியலை எங்ககிட்ட காட்டாதீங்க: பாக்., தலைவர்களுக்கு பயங்கரவாதி மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: 'இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை நாடு கடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று,பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ கூறியதற்கு, ஹபீஸ் சயீத் மகன் காட்டமாக பதில்அளித்துள்ளார்.பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவிகளை செய்து வருகிறது என்பது நீண்ட நாள் குற்றச்சாட்டாகவே இருக்கிறது. அதிலும், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து, அதன் தலைவர்களை அங்கு மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், 'இந்தியாவுடன் அமைதி பேச்சு நடத்துவதற்கு தேவைப்பட்டால், ஹபீஸ் சயீத், மசூத் அசாரை நாடு கடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று, பாக்., முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். இந்த கருத்துக்கு, ஹபீஸ் சயீதின் மகன் தல்ஹா சயீத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

வெளியுறவு கொள்கையில் பிலாவல் புட்டோ ஓர் நம்பகமான நபர் அல்ல. அவர் ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல. என் தந்தையை நாடு கடத்தலாம் என எப்படி சொல்ல முடியும்? உங்களுடைய அரசியலை எங்களிடம் காட்டாதீர்கள். எங்களுக்கு பாதுகாப்பாக இல்லாமல், எதிரிகளிடம் ஒப்படைப்பதாக எப்படி கூறலாம்? இவரிடம் அரசு பொறுப்பை ஒப்படைத்தால் என்னவாகும்? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Bahurudeen Ali Ahamed
ஜூலை 08, 2025 14:19

பயங்கரவாதிகளை வளர்த்துவிட்டதன் பலனை பாகிஸ்தான் அனுபவிக்கிறது, இப்பவாவது திருந்தி ஆயுதம் செய்வதை விடுத்து நாட்டு மக்களுக்கு நன்மைசெய்ய முயன்றால் இன்றுள்ள இந்தியாவின் நிலையை அடுத்த ஐம்பது ஆண்டுகளிலாவது அடையலாம் இல்லையென்றால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது


N Srinivasan
ஜூலை 08, 2025 13:16

கடன் வாங்கிய காசில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டு விட்டார்கள்


Nagarajan D
ஜூலை 08, 2025 12:39

தீவிரவாதி என்றுமே சாகும் வரை தீவிரவாதி தான்...


தத்வமசி
ஜூலை 08, 2025 12:37

பாகிஸ்தானில் அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் இருவரையும் கையாளுவது ராணுவம் தான். ராணுவம் தான் உண்மையில் ஆட்சி செய்கிறது. ராணுவமோ வெளிநாட்டு பணத்தை நம்பித் தான் உள்ளது. அந்த எஜமானர்கள் என்ன சொல்கிறார்களோ அது தான் இந்த நாட்டில் நடக்கும். அதனால் இருவரும் அமைதியாக இருப்பது நல்லது.


Pandi Muni
ஜூலை 08, 2025 12:46

ஏன் ரெண்டு பயலுகளும் அடிச்சி காட்டட்டுமே யார் பெரியவன்னு நாம வேடிக்கை பார்ப்போமே


S Bala
ஜூலை 08, 2025 12:29

திராவிடம் என்ற இல்லாத ஒன்றை இல்லை என்று சொன்னால் சில அடிமைகளுக்கு கோபம் வருகிறதே அப்படியா?


Barakat Ali
ஜூலை 08, 2025 12:25

அங்கே ஆளும் வர்க்கமே பயங்கரவாதிகளால் மிரட்டப்படும் நிலை இருக்கும்போது பிலாவல் பூட்டோ ஒரு பொருட்டா என்ன ????


Karthik Madeshwaran
ஜூலை 08, 2025 11:25

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சோறு ஊட்டி வளர்கிறது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். இந்தியாவிடம் பிடித்து கொடுத்தால் உண்மையான முஸ்லீம் இல்லையாமே ? இது எப்படி இருக்குன்னா, பாஜக கட்சிக்கு எதிராக உண்மையை பேசினால்- நீ உண்மையான இந்து அல்ல, நீ ஒரு தேச விரோதின்னு அவங்களே சொல்லிட்டு திரிவாங்களே.. அது போல இருக்கு.. கால கொடுமை.


Anand
ஜூலை 08, 2025 10:41

பிலாவாலுக்கு புலிவாலை பிடித்த கதையாக ஆகிவிட்டது, என்ன செய்வது நீ என்ன விதைத்தாயோ அதை தான் அறுவடை செய்வாய்.


V RAMASWAMY
ஜூலை 08, 2025 10:15

முதற்கண் காஷ்மீர் என்பது நம் நாட்டின் ஒரு அங்கம் அதனைப்பற்றி பேச்சு வார்த்தை நடத்த அவசியமே இல்லை. மற்ற விஷயங்களான நம் நாட்டில் அவர்களால் ஏவப்படும் தீவிரவாதம் அறவே ஒழித்தல், அங்கு ஓளிந்துகொண்டிருக்கும் நம்மால் தேடப்பட்டு தண்டனை கொடுக்கப்படவேண்டிய தீவிரவாதிகளையும் பயங்ககரவாதிகளையும் நம்மிடம் ஒப்படைத்தல் இவைகளை அவர்கள் செய்யவேண்டியது தான் அவர்களை வேலை, இதில் பேச்சு வார்த்தைக்கு வேலையே இல்லை. அவர்கள் வீண் வாய்ப்பேச்சினால் நமக்கு ஆக்கவேண்டியது ஒன்றுமில்லை. அவர்கள் வளர்த்த துஷ்ட மிருகங்கள் அவர்கள் மீது பாயப்போவது நிச்சயம்.


Venkateswaran Rajaram
ஜூலை 08, 2025 10:12

அவர் ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல. என் தந்தையை நாடு கடத்தலாம் என எப்படி சொல்ல முடியும்? உங்களுடைய அரசியலை எங்களிடம் காட்டாதீர்கள்....உண்மையை கூறினால் அவர் முஸ்லிம் இல்லை என்று கூவுகிறார்கள் இந்த பயங்கரவாதிகள் ....கெடுவான் கேடு நினைப்பான்