உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போதைப்பொருள் சப்ளை: இந்தியர்களுக்கு தடை

போதைப்பொருள் சப்ளை: இந்தியர்களுக்கு தடை

வாஷிங்டன்:'பெனடில்' போதைப் பொருள் கலந்த மாத்திரைகளை வினியோகித்ததாக இரண்டு இந்தியர்களுக்கு, அமெரிக்காவின் கருவூலத்துறை தடை விதித்துள்ளது. பெனடில் என்பது மருத்துவ ரீதியில் வலி நிவாரணியாக செயல்படுகிறது. அதே நேரத்தில் இதை குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால், போதை ஏற்படும். அமெரிக்காவில் பெனடில் கலந்த போதைப் பொருட்கள், போதை மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இதற்கு எதிராக அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மருந்து என்ற பெயரில், பெனடில் கலந்த போதைப் பொருள், போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலில், இந்தியர்களான சாதிக் அப்பாஸ் ஹபீப் சையத் மற்றும் கி ஸர் முகமது இக்பால் ஷேக் ஆகியோரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இவர்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அவற்றின் வாயிலாக இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இருவர் மீதும், இந்தியாவில் இருந்து ஆன்லைன் வாயிலாக செயல்படும் அவர்களுக்கு சொந்தமான மருந்து நிறுவனம் மீதும் பொருளாதார தடைகளை விதித்து, அமெரிக்க கருவூலத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை