உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 4வது குழந்தைக்கு "ஹிந்த்" என பெயரிட்டார் துபாய் பட்டத்து இளவரசர்

4வது குழந்தைக்கு "ஹிந்த்" என பெயரிட்டார் துபாய் பட்டத்து இளவரசர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: துபாய் பட்டத்து இளவரசரான ஷே க் ஹம்தான், தனக்கு பிறந்த 4வது பெண் குழந்தைக்கு 'ஹிந்த்' என பெயர் சூட்டி, அதை சமூகவலைதளத்தில்(இன்ஸ்டாகிராம்) பதிவிட்டுள்ளார்.ஷேக் ஹம்தான் 2008 ல் துபாயின் இளவரசரானார்.அவர் மேலும் ஐக்கிய அமீரக துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். இவர் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஆகியோரின் இரண்டாவது மகனாவார்.இந்நிலையில் இவருக்கும் அவரது மனைவியான ஷேகா ஷீக்கா பின்தே சைத் அல் மக்தூம் ஆகியோருக்கு நான்காவது குழந்தை பிறந்துள்ளது. புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு 'ஹிந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது.ஷேக் ஹம்தானுக்கு ஏற்கனவே ராஷிதா, ஷெய்கா மற்றும் முகமது என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது 4வது பெண் குழந்தை பிறந்துள்ளது.'ஹிந்த்' என்பது அரபு பாரம்பரியத்தில் ஒரு பிரபலமான பெண் பெயர் என்றும் இது வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.ஷேக் ஹம்தான் தனது சமூக பதிவில் குழந்தையின் பிறப்பை குறிப்பிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர் இளவரசருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram Moorthy
மார் 30, 2025 01:50

உழைக்கும் நேர்மையான இந்துக்களுக்கு அரேபியா நாடுகளில் மதிப்பு அதிகரித்து வருவது மிகவும் நல்ல விஷயம்


karthik
மார் 28, 2025 13:59

ஹிந்த் என்ற வார்த்தையை பல ஆயிரம் ஆண்டுகளாக அரபு, சிரியா லெபனான் நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு பெருமையுடன் வைத்து வந்திருக்கிறார்கள்.. நாம் நாட்டில் உள்ள இடையில் மதம் மாறியவர்களுக்கு உண்மையான அரபு கலாச்சாரமும் தெரியாது..பாரத கலாச்சாரமும் தெரியாது..இது மிகவும் ஆபத்தானது


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 06:08

சரியா சொன்னீங்க


naranam
மார் 28, 2025 03:15

அவர்கள் முறைப்படி அரேபிய மொழியில் பெயரிட்டுள்ளனர்.. இதில் நமக்கு என்ன பெருமை.. இதுவும் ஒரு செய்தியா?


மைதீன், நாகூர்
மார் 27, 2025 21:39

கூட "U" சேர்த்து "Hindu" அப்படின்னு வச்சிருக்கலாம்


தினகரன்,சிவகங்கை
மார் 28, 2025 04:02

அதென்ன புதிதாகப் பிறந்த பெண் குழந்தை? இதற்கு முன் அவர்களுக்கு பழையதாக ஏதும் பெண் குழந்தை பிறந்திருக்கிறதா?


Appa V
மார் 27, 2025 21:27

அல் ஹிந்த் அரபு நாடுகளில் சர்வ சாதாரணம் ...


நிக்கோல்தாம்சன்
மார் 27, 2025 21:14

அவங்க அம்மா பெயரில் ஹிந்Sheikha Hind bint Maktoum bin Juma Al Maktoum என்று இருப்பதை அம்மாவின் நினைவாக அந்த பெண் குழந்தைக்கு பயன்படுத்தியுள்ளார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை