உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாண்டியாகோ; சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் மக்கள் பீதி அடைந்தனர். தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது சிலி நாடு. இந்த நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந் நில நடுக்கம் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. சிலியில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதை ஐரோப்பிய கண்டத்தின் நில நடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி உள்ளது. நில நடுக்கத்தின் போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா, உயிரிழப்புகள் உள்ளதா என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமிராக்களில் கட்டிடங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கும் அதிகமாக பதிவான அந்த வீடியோவில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் அதிரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை