உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கனை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு

ஆப்கனை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு

காபூல்; ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.6 ஆக பதிவாகி இருக்கிறது.ஆப்கானிஸ்தானில் இன்று (அக்.17) மாலை கான்டுட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில், கான்டுட் மாகாணத்தின் தென்கிழக்கே 46 கிமீ தொலைவில், 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் அல்லது உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த செப்.4ம் தேதி ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கே 6.2 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் இந்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 2,200 பேர் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !