வாசகர்கள் கருத்துகள் ( 1 )
6.4 க் கெல்லாம் பயப்பட தேவையில்லை 7.க்கு மேல் வந்தால்தான் பிரச்சனை.. துருக்கிக்கு அப்படி விரைவில் வரும்..
மாஸ்கோ; ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; ரஷ்யாவின் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் அண்மையில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதன் பின்னர் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.சிறிதுநேரத்தில் மீண்டும் 5.3 மற்றும் 4.5 என்ற ரிக்டர் அளவுகோலில் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3 முறை நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறி உள்ளது.
6.4 க் கெல்லாம் பயப்பட தேவையில்லை 7.க்கு மேல் வந்தால்தான் பிரச்சனை.. துருக்கிக்கு அப்படி விரைவில் வரும்..